ஆங்கிலப் பேராசிரியரைப் பற்றி அறிஞர் அண்ணா அவர்கள் சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் படித்துக கொணடிருந்த போது,இப்பொழுது அக்கல்லூரியின் முதல்வராக இருக்கும் தோழர் ஆர்.கிருட்டிணமூர்ததி (அய்யர்) அவர்கள் ஆங்கிலப் பேரா சிரியராக இருந்து வந்தார். அவரது நடை உடை நடிப்புகக ளெல்லாமஇப்பொழுது எப்படியிருக்கின்றனவோ அப்படியே தான் அப்பொழுதும இருந்து வந்தன. பேராசிரியர் கிருட்டிணமூர்த்தி என்றால், அவரைச் சில மாணவர்கள் அச்சத்தோடு தொலைவிலேயே நின்று பார்ப் பார்கள். சிலர் அச்சத்தைச் சிறிது விட்டு அடக்கத்தோடு நெருங்கி நின்று பார்ப்பார்கள், வேறு சிலர் அச்சத்தை அறவே விட்டு அடக்கத்தோடு அவரிடம்,நெருங்கிப் பழக முற்படுவார்கள். மற்றுஞ் சிலர் அடக்கத்தையும் விட்டுத் தே தாழமையுணர்ச்சியோடு நெருங்கிப் பழகுவார்கள். பொது வாக இந்த நான்கு வகையில் அவருக்கும் மாணவர்களுக்கும் டையே தொடர்புகள் காணப்படும். . பச்சையப்பன் கல்லூரியில் முதல் வகுப்பில் சேரும் மாணவர்கள், நான்காம வகுப்பை முடிப்பதற்குள் மேற் சுட்டிக்காட்டப்பட்ட நான்குவகையில் பேராசிரியர் கிருட்டிணமூர்த்தி அவர்களோடு தொடர்பு கொள்வது இயல்பாக இருக்கும். காரணம் என்னவென்றால், கல்லூரிக்கு முதன் முதலாக வந்து முதல் வகுப்பில் சேரும் மாணவர்கள் பேராசிரியரின் அதட்டல், உருட்டல்,
பக்கம்:அண்ணாவோடு வாழ்ந்த அந்தச் சிறைவாசம்.pdf/139
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
