பக்கம்:அண்ணாவோடு வாழ்ந்த அந்தச் சிறைவாசம்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13 விட்டுப் பிறகு என்னை அறியாமலே தூங்கி விடுவேன். அறிஞர் அண்ணா அவர்கள் அறைக் கதவின் கம்பிகளுக்கு அருகில் உட்கார்ந்து கொண்டு, கம்பிகளுக்கு இடையில் வெளித்தாழ்வாரத்திலிருந்து வரும் மின்விளக்கு வெளிச் சத்தில் ஏதேனும் அவர் விரும்பிய ஒரு நூலைப்படித்துக் கொண்டிருப்பார்கள். இடையிடையே நான் விழித்துக் கொண்டு டார்க்கும்போதும் அவர்கள் படித்துக்கொண்டே இருப்பார்கள். சில இரவு நேரங்களை அண்ணா அவர்கள் கட்டுரைகள் எழுதப் பயன்படுத்தியிருக்கிறார்கள். 'பிரெஞ் சுப்புரட்சி', 'பிரான்சு நாட்டை ஆட்டிப் படைத்த ரிஷ்லு', 'ஜியார்டனோ புருனோ', 'ரஸ்புடீன் போன்ற வரலாற்றுக் கட்டுரைகளை அறிஞர் அண்ணா அவர்கள் சிறையில்தான் எழுதினார்கள். பின்னர் அவற்றைத் 'திராவிட நாடு' ஏட்டில் வெளியிட்டார்கள். சில நாட்களில் அண்ணா அவர்கள் அகநானூறு, சலித்தொகை, புறநானூறு, திருக் குறள் போன்ற இலக்கியங்களின் சிறந்த பகுதிகளைப் . கருத்துரையும் கேட் நயங்களை எடுத்துச் படிக்கச்சொல்லி விளக்கவுரையும், பார்கள். நான் அவற்றிலுள்ள, சொல்லும் போது நயங்களைப் பெரிதும் வியந்து மகிழ்வ தோடு, புலவர்களுக்குத் தோன்றாத சில நயங்களையும் சுட்டிக் காட்டுவார்கள். அண்ணா சுட்டிக்காட்டும் நயங்கள் எண்ணி எண்ணி மகிழத்தக்கவையாக இருக்கும். . சில நேரங்களில் அண்ணா அவர்கள் தம்முடைய இளமைப்பருவக் காலத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சிகள் கல்லூரி யில் படிக்கும்போது ஏற்பட்ட நிகழ்ச்சிகள், நீதிக்கட்சியில் சேர்ந்து தொண்டாற்றியபோது ஏற்பட்ட அனுபவம், பெரியாரோடு சேர்ந்து பணியாற்றியபோது நிகழ்ந்த விளை வுள் போன்றவற்றை கனத சதையாகச் சொல்லு வார்கள். அவையெல்லாம் சேட்கக் கேட்க வியப்பூட்டுவன வாகவும், சுவை பயப்பனவாகவும், தெளிவுதருவனவாகவும் இருக்கும்,