139 மிரட்டல் முதலிய "தர்பார்' நடவடிக்கைகளைக் கண்டு அச்சப்பட்டுப் போவார்கள். முதல் வகுப்பில் அவர்
நடத்தும் தர்பார் நடவடிக்கைகள், இரண்டாவது, மூன்றாவது, நாங்காவ து - ஆனர்சு வகுப்புக்களில் முறையே சிறீது சிறிதாகக் குறைந்தே காணப்படும். இறுதி வகுப்பு மாணவர்களோடு அவரும் சர்வ சாதாரண மாகப் பழகுவார்; மாணவர்களும் ஆண்டுக்கு ஆண்டு அச்சத்தைக் குறைத்துக் கொண்டு தோழமையுணர்ச்சி யோடு பழக முற்பட்டு விடுவார்கள். அவர்கள் அறிஞர் அண்ணா அவர்கள், இந்த நிலையைப் பேராசிரியர் கிருட்டிணமூர்த்தி அவர்கள்முன்னிலையிலேயே ஒருமுறை உணர்த்திவிட்டார்கள். அணணா இறுதி வகுப்பை முடிக்குந் தறுவாயில், ஆசிரியர்களுக்கு அண்ணாவும் பிற மாணவர்களும் சேர்ந்து நடத்திய தேநீர் விருந்துக் கூட்டமொன்றில், அண்ணா அவர்கள் பேசும் போது. ஒவ்வொரு ஆசிரியரைப்பற்றியும் வேடிக்கையாகப் பேசிக்கொண்டு வரும்போது, பேராசிரியர் கிருட்டிண மூர்த்தி அவர்களைப் பற்றிக் குறிப்பிட்டுப் பேசும்படி நேர்ந்தது. அப்பொழுது அண்ணா அவர்கள் "பேராசிறி யர் கிருட்டிணமூர்த்தி முதல் வகுப்பில் சர்வாதிகாரியாக வும், இரண்டாவது வகுப்பில் குடியாட்சிக்கோனாகவும் மூன்றாவது வகுப்பீல் குடியரசுத் தலைவராகவும், நாள் காவது வகுப்பில் தோழராகவும் விளங்குகிறார்" (Prof Krishnamurthy is Dictator in the I.U.C., Constitutiona Monarch in the II U.C, Republican president in the III U.C.and Comrade in theIV U.C.) என்று குறிப்பிட்டார் கள். கூடியிருந்த எல்லோரும் ஆரவாரம் செய்து விழுந்து விழுந்து சிரித்தார்கள்; பேராசிரியர் கிருட்டிணமூர்த்தி அவர் களும் வழக்கம் போல் எல்லோரோடும் சேர்ந்து சிரித்து மகிழ்ந்தார்கள். மன்றம், நாண் : 13-7-56