பக்கம்:அண்ணாவோடு வாழ்ந்த அந்தச் சிறைவாசம்.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புகைவண்டி போயிற்று!- பிறகு டிக்கட்டு வந்தது பொதுவாகப் போட்டி போட்டு மல்லுக்கு நிற்பது இடித்துப் புடைத்துக் கொண்டு மேல் விழுந்து செல்வது, நெருக்கடியில் சிக்கித் தாக்குவோரைத் தள்ளிக்கொண்டு மேற்செல்வது போன்ற பண்புகளை அறிஞர் அண்ணா அவர்களிடம் அறவே காணமுடியாது.

அடிபிடி சண்டையோ, மக்கள் கூட்டத்தின் நெரிசலோ காணப்பட்டால் அண்ணா அவர்கள் அவற்றில் தாம் சிக்கிக் கொள்ளாமல்,ஒதுங்கித் தப்பிப் போகவே பார்ப்பார்கள். புகைவண்டியிலோ, அல்லது நிலவூர்தியிலோ (பஸ்ஸிலோ கூட்டம் மிசுவாக இருந்து நெரிசல் காணப்பட்டால், அவை களில் ஏறாமல் நின்று விடுவார்களே ஒழிய, எப்படியும் போய்த் தீருவது என்று இடித்துப் புடைத்துக்கொண்டு ஏறுவது கிடையாது. அண்ணாவின் இந்தப் பண்பு பெரியார் அவர்களுக்குத் துவக்கக் காலத்தில் புலப்படவில்லை. பெரியாரும் அண்ணா வும் சிலபொழுது சேர்ந்து சுற்றுப்பயண நிகழ்ச்சிகளில் ஈடுபடுவது உண்டு. அந்த நாட்களில், நீண்ட தொலைவி லுள்ள புகைஎண்டி நிலையத்திற்கு ஒரே முறையாக டிக்கட்டு எடுப்பதைவிட, இடையிலுள்ள சில நிலையங்களில் இறங்கி இறங்கி எடுத்துக்கொண்டு சென்றால், அதன்மூலம் சிறிதளவு கட்டணத் தொகை மிச்சப்படுவது வழக்கம், பெரியாரும், அண்ணாவும் ஒருமுறை ஈரோட்டிலிருந்து