144 . இந்த நிலையில் அறிஞர் அண்ணா அவர்கள், அரசியல் வாழ்வைவிட்டே விலகி, ஒதுங்கிவிடுவது என்ற முடிவுக்கு வந்து,காஞ்சிபுரம் சென்று தங்கிவிட்டார்கள். கொள்கைப் பற்றுக் கொண்ட பல்லாயிரக் கணக்கான தூய உள்ளம் படைத்தோர் என்ன செய்வது. ஏது செய்வது, எதிர்கால அரசியல் வாழ்வை எப்படி மேற்கொள்வது என்று எண்ணி ஒன்றும் புரியாமல் தவித்துக் கொண்டிருந்தார்கள் தோழர்கள் என்.வி.நடராசன், ஈ.வெ.கி.சம்பத். கே. கோவிந்தசாமி, இரா. நெடுஞ்செழியன் போன்றவர்கள் அண்ணாவிடம் சென்று தங்களுக்கும், பிறர்க்கும் ஏதேனும் யழிப்படராப் பாங்குள்ள வழிகாட்ட வேண்டும் என்று வற்புறுத்தி விரும்பிக் கேட்டுக் கொண்டார்கள். நீண்ட நேரத் தயக்கத்திற்குப் பிறகு, எல்லோரும் சேர்ந்து கண்ணீரைத் துடைத்துக்கொண்டு நடப்பதற்கான நேரிய வழி ஒன்று காண சென்னை வந்தார்கள். சென்னையில், பவழக்காரத் தெருவிலுள்ள கட்டிடம் ஒன்றில் முக்கியமான தோழர்கள் அடங்கிய தனிக்கூட்டம் ஒன்று கூடிற்று. அதில் அண்ணா அவர்கள் எல்லோரும் திராவிடக் கழகத்தைவிட்டு வெளியேறித் தனிக் கழகம் அமைத்துக் கொள்ளலாம் என்றும், அதுதான் அமைதியை நிலைநாட்டுவதற்கும், வளர்ச்சி பெறுவதற்கும் ஏற்றவழி யாகும் என்றும் கூறினார்கள். அப்பொழுது அண்ணா அவர்சளின் கருததை யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. பெரியாரின் போக்குக்கண்டு வெறுப்படைந்துள்ளவர்கள் ஏராளமாக இருப்பதால் திராவிடக் கழகத்தையும், திராவிடக் கழகச் சொத்துக்களையும் வன்முறையில் ஆகிலும் கைப்பற்றியே ஆகவேண்டும் என்ற கருத்தைத் தோழர்கள் சம்பத் நடராசன், சிததையன், கோவிநதசாமி, நெடுஞ்செழியன், மணிமொழியார் போன்ற பலரும் துடி துடிப்புணர்ச்சியுடன் வற்புறுத்தினார்கள். திராவிடக்
பக்கம்:அண்ணாவோடு வாழ்ந்த அந்தச் சிறைவாசம்.pdf/145
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
