பக்கம்:அண்ணாவோடு வாழ்ந்த அந்தச் சிறைவாசம்.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

145 கழசத்தைக் கைப்பற்றுவது என்ற முயற்சி வீண்சண்டை சசசரவுகளிலும் அடிதடிகளிலும, நேரததையும், உழைப்பை யும், அறிவையும் கழிக்கவேண்டி நேரிடும் என்றும், இரண்டு சாராரையும் அடக்கி ஒடுக்க அரசாங்கத்திற்கு நல்ல வாய்ப்புகள் ஏற்பட்டுவிடும் என்றும், மாற்றார்கள் இழித்தும் பழித்தும் ஏளனமாகக் கூற இடம் கிடைக்கும் என்றும், கொளகைப்பற்றுடையோர் சிறிதுசிறிதாக வெளி யேற நேரிடும் என்றும் சொல்லியதோடு, அப்படிப்பட்ட வனமுறைச்செயல்களுக்குத் தாம் தலைமை ஏற்க இயலாது என்றும, வேண்டுமானால் வேண்டுமானால் சாதாரண உறுப்பினராக இருக் கிறேன என்றும் சொல்லிவிட்டு அறிஞர் அண்ணா அவர்கள் மீண்டும் காஞ்சிபுரம் சென்றுவிட்டார்கள். இப்படியாக இரண்டு மூன்று திங்கள்கள் எந்த முடிவும் ஏற்படாமல் கழிந்தன. அந்த இரண்டு திங்கள்களில் ஏற்பட்ட அனுபவம், அண்ணாவின் வழியே ஏற்ற வழி யாகும் என்ற முடிவுக்கு ஏனையோரைக் கொண்டுவந்தது. மீண்டும் அண்ணாவை அவர்கள் நாடி அஸ்ணாவின் கருத்தை முழுமனதோடு ஏற்க இசைந்தனர். வன்முறைக்குச் சிறிதும் இணங்காமல், காரியந்தான் பெரிதே ஒழிய வீண் வீரியம் அல்ல என்று அறிஞர் அண்ணா அவர்கள் கொண்ட பெருநோக்கந்தான் திராவிட முன்னேற்றக் கழகத்தை இன்று செழிப்புற வளர்த்து வருகிறது. மன்றம், நாள் 158.56