ஆபத்து ஒன்று அகன்றது 1914 ஆம் ஆண்டில் சேலத்தில் கூட்டப்பட்ட மாநில மாநாட்டில்தான் தென் இந்திய நிலவுரிமைச் சங்கம்' என்ற நீதிக்கட்சியின் பெயர் 'திராவிடக் கழகம்' என்று மாற்றப்பட்டது. இந்தப் பெயர் மாற்றத் தீர்மானத்தோடு கழகத்தைச் சார்ந்ததையும், பதவியையும தாங்கியிருக்கக் கூடாது என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது இந்த தீர்மானங்களை அறிஞர் அண்ணா அவர்கள் தாம் கொண்டு வந்து நிறைவேற்றினார்கள். பதவினயயும், பட்டத்தையும் துறந்துவிட வேண்டும் என்று போடப்பட்ட தீர்மானம், நீதிக்கட்சியிலிருந்து வந்த பணக்காரர்களுக்கும், பட்டந்தாங்கிகளுககும், பதவியாளர்க் கும் பேரிடியாக இருந்தது. அவர்களெல்லாம் திராவிடக் சழகத்தோடு பங்குகொள்ளாமல், நீதிக்கட்சியின் பெயரி லேயே இருந்து வரத் தலைப்பட்டனர். அப்பொழுது நீதிக்கட்சியில் தலைவர்கள் தான் இருந்தார்களே ஒழிய, தொண்டர்கள் யாரும் இல்லை. பாடுபடும் தொண்டர்கள் அனைவரும் திராவிடக் கழகத்தில் இணைந்திருந்தனர். எப்படியேனும் திராவிடக் கழகத்தைத் தம் வழிக்கு மீண்டும் இழுததுக் கொண்டால் தமசகு வசதியாக இருக்கும் என்று நீதிக்கட்சித் தலைவர்களில் சிலர் எண்ணினர். அதற்கான முயற்சியையும் அவர்கள் மேற் கொண்டார்கள்.
பக்கம்:அண்ணாவோடு வாழ்ந்த அந்தச் சிறைவாசம்.pdf/147
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
