பக்கம்:அண்ணாவோடு வாழ்ந்த அந்தச் சிறைவாசம்.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

147 நீதிக்கட்சியில் தலைவர்களாக இருந்த பொப்பிலி அரசர், செட்டி நாட்டரசர் சர் முத்தையா, காலஞ்சென்ற தாழர் என்.ஆர்.சாமியப்பா ஆகியோர் நீதிக்கட்சிக்கும் திராவிடக் கழகத்துக்கும் இடையே ஒரு உடன்பாடு ஏற்படுத்த முயன்றனர். அதற்கான பேச்சுவார்த்தைகள் நடத்த திராவிடக் சழகத் தலைவராக அப்பொழுதும் இருந்துவந்து பெரியார் இராமசாமி அவர்களை நீதிக் கட்சித் தலைவர்கள் அழைத்தார்கள். அந்த அழைப்பை ஏற்று அவர்களைக் காணப் போவதற்கு முன்பு பெரியார் அவர்கள், அறிஞர் அண்ணா அவர்களிடம் அவர்கள் எதற்காகத் தம்மை அழைத்திருப்பார்கள் என்று கலந் தானோசித்தார்கள். அண்ணா அவர்கள், "அவாகள் உங்களைத் தம் வயப்படுத்தத்தான் இப்பொழுது அழைத் துள்ளார்கள். மட்டம் பதவியைத்துறக்கவேண்டும் என்று சேலம் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைக் கைவிடும்படி வற்புறுத்தவே உங்களை அவர்கள் அழைத் திருப்பார்கள் என்று கருதுகிறேன். அவர்கள் அதற்கு நிதி தருகிறோ இதற்கு நிதி தருகிறோம் என்று பணத் தீர் தாயைக் காட்டி உங்களைத் தம்வயப்படுத்தலாம் என் எண்ணிக் கொண்டிருப்பார்கள் நீங்கள் இதில்தான் மீக எச்சரிக்கையாக இருக்கவேண்டி நேரிடும். அந்தத் மானத்தைக் கைவிட நீங்கள் எந்த விதததிலும் இடமதந்து விடாதீர்கள். அவர்களுக்கு வீட்டுக்கொடுக்கும்படியான நிலைமை ஏதேனும் ஏற்பட்டால், எனனைப் போன்றவர்கள் இயக்கத்தைவிட்டு வெளியேறும்படியான நிலைமை ஏற் படும்" என்று சொல்லி அனுப்பினார்கள். ச. சென்னை காஸ்மோபாலிட்டன் கிளப்பில் மேல்மாடி யில், பொப்பிலி அரசர், செட்டிநாட்டரசர் முத்தையா, இராவ்பகதூர் என்.ஆர். சாமியப்பா ஆகியோரைப் பெரியார் அவர்கள் சந்தித்தார்கள். அறிஞர் அண்ணா