பக்கம்:அண்ணாவோடு வாழ்ந்த அந்தச் சிறைவாசம்.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 அவர்கள் ஊகித்து முன்கூட்டிக் கூறியவாறு நீதிக் கட்சித் தலைவர்கள் பல்வேறு ; துறைகளுக்கு நிதி தருவதாக வாக் களித்து, பட்டம் பதவியைத் துறக்கும் தீர்மானத்தைக் கை விடும்படி பேரம்பேசினர். பணத்தோடுகூடிய நீதிக்கட்சித் தலைவர்களைக் கைவிடுவதா? அல்லது அண்ணா போன்ற தொண்டர்களைக் கைவிடுவதா? என்ற பிரச்சினை பெரியார் உள்ளத்தைக் குடைந்தது. முடிவில் தொண்டர் களைக் கைவிடக்கூடாது என்ற முடிவுக்கு வந்து, நீதிக் கட்சித் தலைவர்களின் கருத்துக்கு சைவு தராமல் பெரியார் அவர்கள் வந்துவிட்டார்கள். அறிஞர் அண்ணாவின் கண்டிப்புரையால் திராவிட யக்கத்துக்கு அப்பொழுது ஏற்பட இருந்த ஆபத்து ஒன்று அகன்றது என்றுதான் சொல்ல வேண்டும். மன்றம், நாள் 1-9-56 தழும்புபட்ட உடல் நமது இலக்கியமும், கலையும், சிற்பமும் மன்பதை அறிவின் சிறந்த சின்னங்களாய்த் திகழ்ந் தன். ஆனால் அவை இப்போது காலம் ஆடிய சூறையாடல்களின் தழும்புகளை ஏற்று நிற் கின்றன. ஆகவேதான் நமது அருமைகளைப் பற்றி வெளிநாட்டு சரித்திர ஆசிரியர்களிடம் கேட்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். அறிஞர் அண்ணா