பக்கம்:அண்ணாவோடு வாழ்ந்த அந்தச் சிறைவாசம்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 சில வேளைகளில் அவர் படிக்க விரும்புகிற ஆங்கில நூல்களை என்னிடத்தில் தந்து சிறைக் கதவு அருகில் உட் கார்ந்து படிக்கச் சொல்லி அவர்கள் படுக்கையில் படுத்த வாறே கேட்டுக்கொண்டிருப்பார்கள். பெரும்பாலும் இரவு நேரங்களில்தான் அண்ணா அவர்கள் உற்சாகத்தோடும், உள்ளக் கிளர்ச்சியோடும் காணப்படுவார்கள். இரவு நேரத்தில் அதிகம் சாப்பிடமாட் டார்கள். நான் டீயாவது காப்பியாவது போட்டுத் தருவேன். அதைக் குடித்துவிட்டு நீண்டநேரம் விழித்துக் கொண்டிருப்பார்கள். இரவு மூன்று மணிக்கு மேல்தான் தூங்க முயலுவார்கள். பகல் 10 மணி வரையில் தூங்கு வார்கள். அறிஞர் அண்ணா அவர்களுக்குவேண்டிய எல்லா வசதி வாய்ப்புகளையும், டணிகளையும் முறைப்படி ஒழுங்காகச் செய்வதில் நான் கண்ணுங் கருத்துமாக இருப்பேன் சிறையில் தரும் உணவுகளையும, காணவரும் நண்பர்கள் தரும் பழங்கள், ரொட்டி போன்றவைகளையும் வாங்கிப் பக்குவப்படுத்தி வைத்து அண்ணா விரும்பும் நேரத்தில் விரும்பும் அளவுக்கு விருப்பமானவைகளை வழங்குவதில் என்னை நானே பழக்கப்படுத்தி வைத்துக்கொண்டிருந்தேன் பகல் நேரங்களில் தோழர் என்.வி.என். அவர்களைக் கிண்டல் செய்வதிலும், வேடிக்கைப் பேச்சுப் பேசுவதிலும் பொழுதைக் கழிப்பார்கள் தோழர் என்.வி.என். அவர்கள் முகச்சவரம செய்து கொண்டிருந்த நேரத்தில் அவரது மீசையைச் சரிசெய்வதாகக் கூறுக் கத்தரிக்கோலை வாங்கி அவர்து அரை மீசையை அடியோடு எடுத்துவிட்டார். தோழர் என்.வி.என். அப்படியே பதறிப்போய் வீட்டார். அரை மீசை போய் விட்டதே என்று மிகவும் கவலைப்பட்டு வருத்தப்பட்டுக் கொண்டிருந்தார். அண்ணாவும் நாங் களும் அவரைக் கேலி செய்து விழுந்து விழுந்து சிரித்து