"யாரையடா சொன்னாய் அது! தன்மதிப்பு இயக்கம் தோன்றி அது பகுத்தறிவுக் காள்கைப் பரப்பலில் மிக மும்முரமாக ஈடுபட்டிருந்த காலததில், கடவுள் - மதம் - வேதம் - புராணம் - இதிகாசம் - சாத் திரம் - சம்பிரதாயம் ஆகியவை பற்றிப் பகுத்தறிவு முறை யில் ஆராய்ந்து ஆராய்ச்சிக் கருத்துக்களை வெளியிடத் தலைப்பட்டது. புராண இதிகாசங்களில் பொதிந்து கிடக் கும் மூடப் பழக்க வழக்கங்கள், குருட்டு நம்பிக்கைகள், இழிதன்மைகள். பொய்மைகள், புனைசுருட்டுக்கள் அறிவுக்கொவ்வாக் கற்பனைகள் போன்ற பலவும் தன்மதிப்பு இயக்கத்தினரால் சுட்டிக்காட்டப்பட்டு வெறுத் தொதுக்கப்பட்டன. தன்மதிப்பு இயக்கத்தினரின் பேச்சுக்களையும், எழுத் துக்களையும் கண்ட வைதீகர்கள் வெகுண்டெழுந்தனர். தன்மதிப்பு இயக்கத்தினரை வரைமுறையின்றி ஏசினர். தூற்றினர், இழித்துரைத்தனர், பழித்துப் பேசினர். தன் மதிப்பு இயக்கத்தினரை நேரியமுறையில் எதிர்த்துநிற்கத் தாளமாட்டாமல் பிறகு அஞ்சி, அடங்கி, ஒடுங்கினர். தன் மதிப்பு இயக்கம் வீறுநடையுடன் வெற்றிவலம் புரிந்து வந்தது. இப்படியாகச் சில ஆண்டுகள் உருண்டு ஓடின. 8942-43 ஆண்டுகள்வாக்கில் இராமாயணத்தைப் பற்றிய ஆராய்ச்சிக் சுருத்துக்களை வெளியிட்டு, அதன் இழிதன்மை யையும், அது திராவிடரை இழித்துரைக்கும் தன்மையை
பக்கம்:அண்ணாவோடு வாழ்ந்த அந்தச் சிறைவாசம்.pdf/150
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
