யும், 150 மூடபக்தி-மூடநம்பிக்கை - மூடப்பழக்க வழக்கம் ஆகியவற்றிற்கு அது உறைவிடமாக விளங்கும் தன்மையை யும் அதில் பொதிந்து கிடக்கும் ஆபாசக் கருத்துக்களையும். கற்பனைகளையும் விளக்கிப் பெரியாரும் பிறரும் வேசிய போது, வைதீகப்பண்டிதர்கள் மீண்டும் வெகுண்டெழுந்து எதிர்க்கத் தலைப்பட்டனர். கம்ப இராமாயணம் தெய் வீகத் தள்மை வாய்ந்தது - அது அப்படியே முழுக்க முழுக்க உண்மைலாய்ந்தது- அதனை அழிக்க யாராலும் முடியாது- சனைத் தீயில் போட்டாலும் அது பொசுங்காது!" என்று வைதீகப் பண்டிதர்கள் வாதிட்டுத் தன்மதிப்பு இயக்கத் தினரை அறைகூவி அழைத்தனர். பெரியார் அவர்களும் அறிஞர் அண்ணா அவர்களும் அந்த அறைகூவலை ஏற்று, 'கம்ப இராமாயணம் தெய்வீகத்தன்மை உடையதும் அல உண்மைவாய்ந்ததும் அல்ல, அதனைத் தீயிலே போடு கிறோம் அது பொசுங்குகிறதா, இல்லையா என்று பாருங்கள்! அதனிடம் கொண்டுள்ள பக்தி சிறுகச் சிறுக அழிகிறதா. லலையா என்று நோக்குங்கள்!" என்று வைதீகப் பண்டிதர்களைப் பார்த்துக் கேட்டுவிட்டுத் தீவிரக் கொள்கைப்பரப்பலில் (பிரசாரத்தில்) இறங்கினர். t அறிஞர் அண்ணா அவர்கள் தமிழகம் எங்கணும் சுற்றுப் பயணம் செய்து, கம்பராமயணத்தை அக்குவேறு ஆணிவேறாக அலசிக்காட்டி, மிகத் தீவிரமான கொள்கைப் பரப்பலில் ஈடுபட்டார்கள். வைதீகப் பண்டிதர்களை வாதுக்கழைத்தார். வாதாடும் வல்லமையிற் சிறந்த இரு பெரும் பண்டிதர்களான தோழர்கள் ஆர். பி. சேதுப் பிள்ளை, ச. சோமசுந்தர பாரதியார் ஆகிய இருவரும் தோற்றுப்போய் ஒடி உட்கார்ந்து விட்டனர்.
அப்பொழுது இராமாயணத்தை நன்கு படித்தறிந்த சாயபு ஒருவர் அண்ணாதுரைக்கு என்ன தெரியும்? தமிழில் ஒரு பாட்டுச் சொல்வத் தெரியுமா? என்று