151 ஆணவத்தோடு கேட்டாராம். அதற்கு விடையிறுக்கும் முகத்தான் அறிஞர் அண்ணா அவர்கள், "எனக்குத் தமிழில் ஒரு பாட்டு சொலலத் தெரியுமா என்று இராமாயண சாயபு கேட்டாராம் எனக்குத் தமிழில் பாட்டுகள் சொல்லத் தெரியுமோ தெரியாதோ,ஆனால் ஒரே ஒரு பாட்டு மட்டும் தெளிவாகச் சொல்லத் தெரியும். எட்டேகா லட்சணமே எமனேறும் பரியே மட்டில் பெரியம்மை வாகனமே - முட்டமேற் கூரையில்லா வீடே குலராமன் தூதுவனே யாரையடா சொன்னா ய் அது (எட்டேகால் லட்சணமே - அவலட்சணமே; எமனேறும் புரியே 1375 எருமையே; மட்டில் பெரியம்மை வாகனமே கழுதையே; முட்டமேற் கூரையில்லா வீடே-குட்டிச் சுவரே ; குலராமன் தூதுவனே - குரங்கே.) என்பதுதான் அந்தப் பாட்டு. இதை அந்தச் சாயபு ளிடம் போய்ச் சொல்லுங்கள்" என்று ஒரு பொதுக்கூட்டத் தில் பேசும்போது குறிப்பீட்டார்கள். . அண்ணாவின் இந்தப் பேச்சைக் கேள்வியுற்ற அந்த சாயபு ஏன் மீண்டும் வாய் திறக்கிறார்? அவ்வளவுதான்! அப்படியே அடங்கி ஒடுங்கிவிட்டார். மன்றம், நாள்: 15-9-:6. தமிழுக்குண்டு தகுதி நம்மிலே சிவர் தவறாக எண்ணிக் கொண்டு இருக்கின்றோம். 'சரித்திரத்தை ஆங்கிலத்தில் தான் படிக்க முடியும், மருத்துவத்தை ஜெர்மன் மொழிபில்தான் படிக்க முடியும் என்று, அந்தத் தவறான மனப்பாங்கு நீங்க வேண்டும். பிற மொழிக் கருத்துக்களை எளிதாக எடுத்துக் சொல்லக் கூடிய தன்மை நம்மவர்களுக்கு உண்டு. அறிஞர் அண்ணா
பக்கம்:அண்ணாவோடு வாழ்ந்த அந்தச் சிறைவாசம்.pdf/152
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
