பக்கம்:அண்ணாவோடு வாழ்ந்த அந்தச் சிறைவாசம்.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்பே விளக்கினார்- நீ புரிந்து கொள்ளவில்லை -நீ திராவிட முன்னேற்றக்கழக முன்னணிச் சொற்பொழி வாளர்களிலே ஒருவரான தோழர் ப.உ.சண்முகம் அவர்கள் மிக்க இளைஞராக இருக்கும்போதே திருவண்ணாமலை நகராட்சி மன்றத் தலைவராக ஆயினார். அவர் பொறுப் பேற்ற சில திங்களுக்குள்ளாகவே தம் அறிவாற்றல் திறமையின் விளைவால் பெரும் பெயரும் புகழும் பெற்றார். அவருடைய அருமை பெருமைகளைத் திராவிட இயக் கத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் பாராட்டவில்லை; மாற்றுக் கட்சியைச் சேர்ந்தவர்களும் மிகவாகப் பாராட் டினர். அவர் திராவிட இயக்கத்தில் நன்கு திளைத்த ஒரு இளைஞராக இருந்தபோதிலும், எல்லா அரசியல் கட்சி களையும் பொது நோக்குடனேயே நோக்கி நடு நிலை நின்று செயலாற்றி வந்தார். எந்த அரசியல் கட்சியைச் சார்ந்த தலைவர்களாயிருந்தாலும் சரி, பிற பிற பொதுப் பணித் தலைவர்களாய் இருந்தாலும் சரி நகராட்சி மன்றத் தின் சார்பாக அவர்களுக்கு வரவேற்பு அளிக்க ஓரிரு உறுப்பினர்கள் விரும்பினாலும் அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றிவைக்க தோழர் ப.உ. சண்முகம் அவர்கள் ஒரு போதும் பின்வாங்கியதில்லை. அந்த அளவுக்கு அரசியல் நாகரிகத்தையும் அரசியல் கண்ணியத்தையும் மிகப்பெருந் தன்மையோடு அவர் வளர்த்து வந்தார்.