பக்கம்:அண்ணாவோடு வாழ்ந்த அந்தச் சிறைவாசம்.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீசை பலியாயிற்று அறிஞர் அண்ணா அவர்கள் மிகச் சிலரோடுதான் நெருங்கிப்பழகுவார்கள். குறிப்பிட்ட அந்த ஒரு சிலருடைய கூட்டுறவைத்தான் அவர்கள் எப்பொழுதும்விரும்புவார்கள். அந்த ஒரு சிலரோடு பொழுது போக்குவதிவேதான் அவர் களுக்கு நிரம்ப விருப்பம். இதனால் அவர்கள் மற்றவர் களையெல்வாம் வெறுப்பார்களோ என்று யாரும் பொருள் கொண்டுவிடக் கூடாது. அண்ணா அவர்கள் எல்லோ ரோடும் எப்பொழுதும் அன்பாகவும், இனிமையாகவும்' கனிவாகவுந்தான் உரையாடுவார்கள். ஆனால் மிகச் சிலர் தான் 'நெருங்கிய நண்பர்கள் பட்டியலில் வருவார்கள். அண்ணா அவர்கள் தம் நெருங்கிய நண்பர்களோடு குழந்தைபோல் பழகுவார்கள். எப்பொழுதும் சிரித்து மகிழ்ந்துகொண்டே பேசுவார்கள். அவர்கள் உரையாடிக் கொண்டிருக்கும்போது நகைச்சுவை பெருக உடனிருக்கும் தம் நெருங்கிய நண்பர்களில் ம் யாரையேனும் கேலியும் கிண்டலும் செய்துகொண்டே இருப்பார்கள். முக்கியமான பிரச்சினைகள் குறித்து நெருங்கிய நண்பர்களுடன் விவா தித்துக் கொண்டிருக்கும்போதுகூட நகைச்சுவைக் குறிப்பு கள் அண்ணா அவர்களிடமிருந்து வெளிப்பட்டுக் கொண்டே யிருக்கும். அண்ணா அவர்களின் நண்பர்கள் குழாத்துள் கேலிக் கும் கிண்டலுக்கும் உரிய ஒருவராகத் தோழர் என்.வி. நடராசன் அவர்கள் அடிக்கடி அகப்பட்டுக் கொள்வார்.