பக்கம்:அண்ணாவோடு வாழ்ந்த அந்தச் சிறைவாசம்.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 அண்ணாவின் கேலியும் கிண்டலும் அவற்றிற்கு ஆளாகு பவர்களைச் சிரிசுகவும் மகிழவும் செய்யுமேயல்லாது, யாருடைய உள்ளத்தையும் புண்படுத்துவனவாகவோ, வருத்ததில் ஆழ்த்துவனவாகவோ அமையா. அப்படிக் கேலியும கிண்டலும வந்து தாக்குமபோது, தோழர் என்.வி நடராசன் அவர்கள் மற்றவர்களோடு சோந்து சிரித்து மகிழ்வார்களே யொழிய, அதற்காக ஒருபோதும் வருத்தம் கொள்ளமாட்டார். மும்முனைப் மன போராட்டக் காலத்தில், அண்ணா என்.வி.நடராசன், சம்பத், மதியழகன், நெடுஞ் செழியன் ஆகியோர் சௌனைச் சிறையில் இருக்கும்போது, தோழர் என்.வி.நடராசன் அவர்கள்தாம பொழுதுபோக்குக்குரிய பொருளாக அகப்பட்டுக் கொள்வார். ஒரு நாள் காலை தோழர் என்.வி.நடராசன் அவர்கள் முடிதிருத்திக் காணடுவந்தார். அவர் தம் மீசையைச் சரிப்படுத்திக் கொள்ளக கத்தரிக்கோலின் மூலம் முயன்றார். அப்பொழுது ' ண்ணா அவாகள் தோழர் நடராசன் அவர்களது மீசை யைத் தாம் சரிப்படுத்தித தருவதாகச் சொல்லிக, கத்தரிக் கோலை வாங்கி மீசையைக் கத்தரிக்கத் தொடங்கினார் அண்ணா அவர்கள், தமக்கு உதவிசெய்ய முன்வந்துள்ள தாகவே தோழர் நடராசன் அவர்கள் கருதிக்கொணடார் கள். ஆனால் அண்ணா அவர்கள் அரை மீசையை அப்படியே கத்தரித்து எடுத்துவிட்டார்கள். தோழர் நடராசன் அவர் களுக்கு எனன செய்வதென்று புரியவில்லை; அப்படியே திகைத்துப்போய் நின்றுவிட்டார். அண்ணாவும் மற்றவர் களும்விழுந்து விழுந்து சிரிக்கத் தலைப்பட்டனர். நடராசன் சிறிது நேரம முகக்கண்ணாடியைப் பார்த்துக் கொண்டு அப்படியே நின்று கொண்டிருந்தார். அரை மீசை போய் விட்டதே என்ற வருத்தம் இருந்தாலும், அவரும் மற்றவர்