"குரங்கு நிலையிலேயே இருக்கிறாய்' அறிஞர் அண்ணா அவர்கள் தம் நண்பர்களோடு ஒரு நாள் நண்பகலில் உணவு அருந்திக் கொண்டிருந்தபோது உணவு அருந்திக் கொண்டிருந்தவர்களிடையே மரக்கறி யுணவு, மாமிசவுணவு பற்றி விளக்கங்கள் கொள்ளப்பட்டன. பரிமாறிக் மரக்கறியுணவு - மாமிசவுணவு பற்றி விவாதம் எழு வதற்குக் காரணம் 'திராவிடநாடு' அலுவலகத்தில் ஓவிய ராக இருந்துவரும் தோழர் பழனி அவர்கள் தமக்கு மாமிச வுணவு பிடிக்காது என்றும் மரக்கறியுணவே வேண்டும் என்றும் சொல்லி அதனை வாங்கிக்கொண்டு தனியே உட் கார்ந்து சாப்பிட்டார்; மற்ற நண்பர்களெல்லாம் மாமிச வுணவைச் சாப்பிட்டார்கள். மாமிச உணவைச் சாப்பிட் டவர்களெல்லாம் தோழர் பழனி அவர்களை வற்புறுத்திச் சிறிதளவு மாமிசத்தைச் சாப்பிட்டுப் பார்க்கும்படி கூறி னார்கள்; தோழர் பழனி அவர்கள் தனக்குப் பழக்கமில்லை என்று சொல்லி இறுதிவரையில் மறுத்தே வந்தார்; அதன் பேரில் மரக்கறியுணவு மாமிசவுணவு பற்றிய விளக்கங்கள் கூறப்பட்டன. நண்பர்கள் பலரும் தத்தம் விளக்கங்களைத் தந்தனர். மரக்கறியுணவு சாப்பிடும் விலங்குகள் எப்படியிருக் கின்றன, மாமிசம் சாப்பிடும் விலங்குகள் எப்படியிருக்கின் முதல் வகையைச் சார்ந்த விலங்குகள் எப்படி மக்க
பக்கம்:அண்ணாவோடு வாழ்ந்த அந்தச் சிறைவாசம்.pdf/159
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
