பக்கம்:அண்ணாவோடு வாழ்ந்த அந்தச் சிறைவாசம்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1$ மகிழ்ந்தோம். தோழர் என்.வி.என் அவர்கள் வேறு வழி யில்லாமல் மற்றொரு பாதி மீசையையும் எடுத்துவிட்டார். இப்படிச் சிறு விளையாட்டுக்கள் புரிந்து மகிழ்வதிவே அண்ணாவுக்குத் தவி விருப்பம் உண்டு. சிறைச்சாலையில் எங்களுக்குக் குறிப்பிட்ட சில நாள் இதழ்களை மட்டும் அன்றாடம் தருவார்கள். அவற்றில் எங்களுக்குத் தெரியக்கூடாத செய்திகளும், கழகச் செய்தி களும் கறுப்புமையால் அடிக்கப்பட்டிருக்கும். கிடைக்கும் செய்திகள் முழுவதையும் அண்ணா அவர்கள் ஒன்று விடாமல் படித்து முடித்து விடுவார்கள். அறி சிறைச்சாலையில் எவ்வளவு வசதிக் குறைவு இருந் தாலும் தொல்லைகள் ஏற்பட்டாலும் அவற்றையெல்லாம் தாங்கிக்கொள்கிற உள்ளத்தோடுதான் ஒவ்வொருவரும் சிறைவாழ்வை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று வுறுத்துவார். சிறைப்பட்ட கழகத்தோழர்கள் ஒவ்வொரு வரும் சிறை விதிகளுக்குக் கட்டுப்பட்டு நடக்கவேண்டும் என்று எல்லோர்க்கும் அடிக்கடி வற்புறுத்தி வந்தார்கள். சிறையில் வசதிகள் கேட்பதையோ அல்லது வசதிகளைக் கோரிப் போராடுவதையோ அண்ணா அவர்கள் அறவே விரும்புவதில்லை. ஒரு நான் 'சி' வகுப்பிலே இருந்த கழகத் தோழர்கள் ஆரம்பத்தில் சிறுநீர்ப் பானையை அறையி லிருந்து வெளியேற்ற மறுத்துவிட்டனர். 'சீ' வகுப்புக் கைதிகள் சிறுநீர்ப் பானைகளை அவரவரேதான் அகற்ற வேண்டும் என்பது சிறையில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் பழக்கமாகும். சிறையதிகாரிகள் எவ்வளவோ சொல்லியும் கழகத் தோழர்கள் சிறுநீர்ப் பானைகளை அறையைவிட்டு விடியற்காலையில் அகற்ற மறுத்துவிட்டனர். பகல் 10 மணி வரையில் அதிகாரிகளுக்கும் கழகத் தோழர்களுக்குமிடையே சச்சரவு நடந்து கொண்டிருந்தது. பிறகு சிறை அதிகாரி