159 ளால் பழக்கப்படுத்தி உதவிக்கு வைத்துக்கொள்ளக் கூடியன வாக இருக்கின்றன. இரண்டாம் வகையைச் சார்த்தவை கள் எப்படிப் பெரும்பாலும் கொடூரம் வாய்ந்தனவாகவும், காட்டில் வாழ்வனவாகவும் இருக்கின்றன என்பன போன்ற விளக்கங்கன் பரிமாறிக் கொள்ளப்பட்டன. மனிதனுடைய உறுப்பு அமைப்புகள், குடல் அமைப்பு எல்லாம் அவன் மரக்கறியுணவு சாப்பிடும் வகையைச் சேர்ந்தவன் என்பதைத்தான் காட்டுகின்றன: மேலும் குரங் கிலிருந்துதான் மனிதன் வந்தான் என்று சொல்லப்படுவ தாலும், குரங்கு மரக்கறியுணவு சாப்பிடும் வகையைச் சேர்ந்ததாக இருப்பதாலும், மனிதன் இயற்கை நியதிப்படி முதல் வகையைச் சேர்ந்தவனாகத்தான் கருதப்பட வேண்டும் என்று ஒரு நண்பர் கூறினார். உடனே தோழர் பழனி அவர்கள் தமது கட்சிக்கு, வலிவு ஏற்பட்டுள்ளதாகக் கருதிக்கொண்டு "அப்படிச் சொல்லுங்கள்!" என்று கூறி மகிழ்ச்சி கொண்டாடினார் மனிதன் நாளுக்குநாள் அறிவு ஆற்றல் பெற்று வளர்ந்து பிறகுதான் மாமிசத்தைப் பக்குவப்படுத்தித் தின்னக் சுற்றுச் கொண்டிருகிறான்; இது செயற்கை முறையில் அவனுக்குப்படிந்த பண்பு என்று முதலில் கூறிய நண்பர் மேலும் விளக்கம் தந்தார். அதுகேட்ட தோழர் பழனி "நான் இயற்கைப் பண் பினைக் கடைப்பிடிப்பவன். எனவேதான் நான் மரக்கறி சாப்பிடுகிறேன். நீங்களெல்லாம் செயற்கைப் பண்பினைக் கடைப்பிடிப்பவர்கள். எனவேதான் மாமிசம் சாப்பிடு கிறீர்கள்!" என்று ஏளனக் குரலில் குறிப்பிட்டார். அது கேட்டுக் கொண்டிருந்த அறிஞர் அண்ணா அவர்கள் "அப்படியானால் நீ மாமிசம் தின்னக் கற்றுக் கொள்ளாத குரங்கு நிலையிலேயே இருச்கிறாய்; நாங்கள்
பக்கம்:அண்ணாவோடு வாழ்ந்த அந்தச் சிறைவாசம்.pdf/160
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
