பக்கம்:அண்ணாவோடு வாழ்ந்த அந்தச் சிறைவாசம்.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 மாமிசம் திளைக் கற்றுக்கொண்ட அறிவாற்றல் மிகுந்து நாகரிக நிலையில் இருக்கின்றோம் என்று பொருள்கொள்ள வேண்டும்" என்று கூறவே எல்லோரும் கொல்லென்று சிரித்துத் தோழர் பழனி அவர்களைக் கேலி செய்தார்கள். தோழர் பழனி பரிதாபத்திற்குரியவரானார். பிறகு தோழர் பழனி அவர்கள் எல்லோரோடும் சேர்ந்து அறிஞர் அண்ணா அவர்களின் நயம் நிறைந்த உரையை நினைத்து நினைத்து சிரித்து மகிழ்ந்தார்! மன்றம், நாள்; 1.11.56 மலையும் கடுகாகும் ஒரு மங்கையைத் தழுவ ஆவலோடு ஒரு ஆடவன் செல்லும் நேரம் எப்படிப்பட்டது? அந்தச் சமயத்திலே, அவனுடைய உணர்ச்சியும் உயிர்த் துடிப்பும் உடன பதைப்பும எடுத்துரைக் காத சவியும் உண்டோ? மலை கடுகாகவும், பாம்பு பழுதையாகவும் தோன்றுமாம், அப்படிப்பட்ட சமயததிலே அறிஞர் அண்ணா