பக்கம்:அண்ணாவோடு வாழ்ந்த அந்தச் சிறைவாசம்.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படோடோபத்திற்கு பணியாமை மிக்க நீதிக்கட்சினர் கோலோச்சிய அந்த நாட்களில், நீதிக் கட்சித் தலைவர்கள் மக்களோடு மக்களாய்ப் பழகும் எளியவாழ்வை ஏற்படுத்திக் கொள்ளாமல், பிறர் கண்டு தங்களை திக்கவேண்டும் என்ற எண்ணத்தில் ஆடம்பரமான முறைகளை விரும்பிமேற்கொணடிருந்தனர். நீதிக் கட்சி நாளடைவில் செல்வாக்கு அற்றுப் போனதற்கு அதுவும் ஒரு காரணம் என்றுதான் சொல்லவேண்டும். நீதிக்கட்சித் தலைவர்களான பொப்பிலி அரசர்,சர். கே.வி. ரெட்டி, ஏ. இராமசாமி முதலியார், ஆர்.கே. சணமுகம் செட்டியார், குமார இராசா முத்தையா செட்டி யார் போன்றவர்கள் சென்னைளயவீட்டு எப்பொழுது வெளி யூருக்கு கிளம்பினாலும், வெளியூரிலிருந்து சென்னைக்கு எப்பொழுது திரும்பினாலும் கட்சியின் பிற தலைவர்களும் நண்பர்களும், தொண்டர்களும் புகைவண்டி நிலையத்திற்கு சென்று செல்லும் தலைவர்களுக்கு மாலை சூட்டி வழி யனுப்புவதும், வரும் தலைவர்களுக்கு மாலையணிந்து வரவேற்பதும் அக்காலத்தில் கையாணட ஆடம்பரங்களி லேயே ஒரு வகையைச் சார்ந்தனவாகும். இந்த முறை பெரியார் அவர்கள் நீதிக்கட்சித் தலைவர் பதவி ஏற்ற சிறிது நாட்கள் வரையிலும் கூடநடைபெற்றது. சேலம் மாநாட்டிறகுச் சிறிது நாட்களுக்கு முன்பு பெரியார் அவர்கள் சென்னை வந்துவிட்டு, மத்திய புகைவண்டி