பக்கம்:அண்ணாவோடு வாழ்ந்த அந்தச் சிறைவாசம்.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 நிலையத்திலிருந்து (சென்ட்ரல் ஸ்டேஷன்) ஈரோட்டுக்குப் புறப்பட்டார்கள். அப்பொழுது வழக்கப்படி பெரிவாரை வழியனுப்பக்குமாரராசா முத்தையா செட்டியார் போன்ற பலரும் புகைவண்டி நிலையத்திற்கு வந்திருந்தார்கள். அறிஞர் அண்ணா அவர்களும் பெரியாரைப் பார்த்து விட்டு வழியனுப்பி வைக்க வந்திருந்தார்கள். . அப்பால் அறிஞர் அண்ணா அவர்கள் பெரியார் அருகில் நின்று ஏதோ உரையாடிக் கொண்டிருக்கும் போது, நின்று வேறு யாரோடோ பேசிக் கொண்டிருந்துவிட்டுத் திருப்பிய குமார ராசா அவர்கள், அண்ணா அவர்கனிடம் நெருங்கி, "என்ன அண்ணாதுறை? சௌக்கியமா, இப்படி வாருங்கள்!" என்று அண்ணா அவர்கள் தோளின் மீது கையைப் போட்டுத் தனியே இரகசியம் பேச அழைப்பது போல அழைத்தார். பலர் குழுமியிருக்கும் போது இப்படிப்பட்ட ஆடம்பர நடிப்பை நடித்துக் காட்டுவது படாடோபக்காரர்களிடத் தில் பொதுவாக் காணக்கூடியதேயாகும். சொல்லிக் கொண்டே அத்தகைய ஆடம்பர தடிப்பு குமாரராசாவிடத்தில் காணப்பட்டதில் வியப்படைவதற்கில்லை. அது அவரது ஆடம்பர வாழ்க் கைக்கு ஏற்ற இயல்பு, அத்தகைய படாடோபப் பசப்பு நடிப்புக்களுக்கும, பசப்பு மொழிகளுக்கும் மதிப்புத்தர விரும்பாத அறிஞர் அண்ணா அவர்கள் உடனே தம் தோளைச் சுற்றிப் போடப்பட்டிருந்த குமார ராசா அவர் களின் கையை மெல்ல எடுத்துக் கீழே விட்டு, "நான் ஐயா வோடு பேசவேண்டியிருக்கிறது. இப்பொழுது உங்க ளோடு பேச நேரமில்லை. பிறகு உங்களைப் க் பார்க் கிறேன்! என்று சொல்லிவிட்டு ஐயா நின்று கொண்டிருந்த பக்கம் திரும்பிக் கொண்டார்கள். ஆண்ணா அவர்களிடம் இருந்து இப்படிப்பட்ட விடை எதிர்பார்க்கவே இல்லை. வரும் என்று குமாரராசா