163 அவருடைய முகம் வெட்கத்தைத் சுருங்கிக் கறுத்துவிட்டது. சினம் தாங்கமாட்டாமல் குமார ராசா கூப்பிட்டு அண்ணா போக மறுக்கிறாரே என்பதைக் கண்ட பெரியார் அவர்களுக்கு, உள்ளுக்குள்ளே அடங்காது பொங்கிற்று. "குமாரராசா என்ன நினைத்துக் கொள்வார்களோ? ஏது நினைத்துக் கொள் வார்களோ? ராசாவின் தயவு இனி இல்லாமல் போய் விடுமோ?" என்பன போன்ற அச்சங்கள் அவரது உள்ளத் தைக் குடைந்தன. பெரியார் அண்ணா மீது எரிந்து விழுந்து, "ராசா கூப்பிடுகிறார்! போங்களேன்! என்னிடத் ல் என்ன பேச வேண்டியிருக்கிறது!" என்று கண்டிப்புக் குர லில் பேசினார்கள். I அண்ணா அவர்கள், குமாரராசாவைப் பொருட்படுத் தாதவர் போல் பெரியார் அவர்கள் முன்னிலையில் நின்று கொண்டு "நான் அவரிடம் பேச வேண்டியது இப்பொழுது ஒன்றுமில்லை! என்று கூறிவிட்டு வேறு பக்கம் எதையோ பார்ப்பதைப் போல் பார்வையைச் செலுத்தினார்கள். குமாரராசா "எங்கே சினந்து கொள்கிறாரோ, என்னவோ" என்று எண்ணிக்கொண்டு பெரியார் அவர்கள், அவரிடம், வண்டி புறப்படும் வரையில் வேறு ஏதுஏதோ பற்றிக் குழைந்து குழைந்து பேசி, அவரது சினததைத் தணித்துக் கொண்டிருந்தார்கள்! மன்றம், நாள் : 15-11-36 .
பக்கம்:அண்ணாவோடு வாழ்ந்த அந்தச் சிறைவாசம்.pdf/164
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
