பக்கம்:அண்ணாவோடு வாழ்ந்த அந்தச் சிறைவாசம்.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரும்பொருள் உரைக்கும் தன்மை ஒன்றின் நிகழ்காலச் சூழ்நிலைகளை ஆராய்ந்து அதன் எதிர்காலத்தின் போக்கு எப்படி அமையும என்பதை வரை யறுத்துக் கூறும் வல்லமை அறிஞர் அண்ணா அவர்களிடத் தில நிரம்ப உண்டு. தோழர் என்.வி.நடராசன் அவர்கள் காங்கிரசில் மிகத் தீவிரவாதியாக இருந்து பாடுபட்டுக்கொண்டு வரும் போதே அவர் அண்ணாவோடு நெருங்கிய நட்புறவு கொண்டு பழகும் பழக்கததைக் கொண்டிருந்தார். கட்சிப் பிரசினைகள் வரும்போது தம்மை ஒரு தீவிர தேசியவாதி யாகக் காட்டிககொள்வதிலும், அந்த நேரங்களில் அண்ணா அவர்களை எந்த அளவுககும எதிர்த்து நிறகத துணிவு கொள்வதிலும் தோழர் நடராசன் ஒருபோதும் தவறுவ தில்லை. தோழர் என்.வி.நடராசன் அவர்களின் உள்ளம், உணர்ச்சி ஊக்கம் ஆகியவற்றைக்கண்ட அண்ணா அவர்கள் "நடராசன்! நீ எைைறக்கேனும் ஒரு நாள் என் கட்சிக்கு வந்து சேரத்தான் போகிறாய பார்! என்னை விட்டு நீ நீ தப்பமுடியாது!" என்று அடிக்கடி சொல்லுவார்கள். அதற்கு, "அண்ணா! அதுதான் முடியாது! எப்பேர்ப்பட்ட நிலைமை வந்தாலும் நான் தேசியததை விட்டு, உங்களைப் போல ஏகாதிபதய தாசனாக மாறமாட்டேன்!" என்று பதிலிறுப்பார். "ஏன் இப்பொழுது வீராப்பு பேசுகிறாய்? & .