163 போகப் போகப் பார்!" என்று அண்ணா அவர்கள் சிரித்துக் கொண்டே கூறுவார்கள். ஊக்க தோழர் நடராசன் அவர்கள் அண்ணாவிடம் பேசும் போது."காங்கிரசு தாய்மொழி தமிழுக்குத்தான் மளிக்குமே ஒழிய, இந்தியைக் கட்டாயமாக ஒருகாலும் புகுத்தாது, மக்களின் நலத்திற்கு மாறுபாடாகக் காங்கிரசு ஒருபோதும் நடக்காது' என்று அடிக்கடி கூறுவார். ஆனால் ஆச்சாரியார் அமைச்சர் அவை 1938 இல் இநதியைக் கட்டாயப் பாடமொழியாகப் புகுத்தியது. அப்பொழுது அறிஞர் அண்ணா அவர்கள தோழர் நடராசனைப் பார்தது இப்பொழுது என்ன செய்யபபோகிறாய்?" என்று கேட் டார்கள். "இந்தியைக் கட்டாயப் பாடமாக்குவது காங்கிரசின் திட்டமல்ல. எனவே நான் அதனை எதிர்ககத் தான் போகிறேன்" என்று தோழர் நடராசன் அவர்கள் அதற்கு மறுமொழி பகன்றார். 66 இந்தி எதிர்ப்பு இயக்கம மிகமும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது காங்கிரசுப் பொதுககூட்டங்களில் கலந்துகொள்ளும் தோழர் நடராசனுக்கு மிக்க சங்கட மான நிலைமை ஏற்பட்டது.காங்கிரசுககாரர்கள் பலரும் கட்டாய இந்தியை ஆதரித்துப் பேசினர். ஆதரித்துப் பேசினால் அவைாவின கேலி பிறக்கும், எதிர்த்துப் பேசினால் பிற காங்கிரசுக்காரர்களின் சினம் சீறும். இறுதி யில், தமக்குப்பட்ட கருத்துவழி நின்று, அண்ணாவின் கேவி மொழிக்கு இடங்கொடாமல், இந்தியை எதிர்த்துப்பேசவே தலைப்பட்டார். இது காங்கிரசு வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பிவிட்டது. இந்திப் பிரச்னையைப் பற்றி முடிவு எடுக்க மாவட்டக் காங்கிரசுச் செயற்குழுக் கூட்டம் அவசரமாகக் கூட்டப்பட்டது. எடுக்கக் இந்திப் பிரச்னையைப் பற்றி முடிவு காங்கிரகின் செயற்குழுக் கூட்டம கூட்டப்பட்டிருக்கிறது.
பக்கம்:அண்ணாவோடு வாழ்ந்த அந்தச் சிறைவாசம்.pdf/166
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
