பக்கம்:அண்ணாவோடு வாழ்ந்த அந்தச் சிறைவாசம்.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 அதற்குத் தோழர் நடராசன் போயிருக்கிறார் என்ற செய்தியைக் கேள்வியுற்ற அறிஞர் அண்ணா அவர்கள் தம் உற்ற நண்பரான டாக்டர் சி. கணேசன் அவர்களை அவசர மாக அழைத்து 'இன்று காங்கிரசுச் செயற்குழுக் கூட்டம் நடைபெறுகிறது. தோழர் நடராசன் சென்றிருக்கிறார். அவர் இந்தியை எதிர்த்துப் பேசப் போகிறார். பெரும் பாலோர் இந்தியை ஆதரித்துத் தீர்மானம் செய்யப் போகி றார்கள். தோழர் நடராசன் அந்தக்கணமே விலகல் கடிதம் கொடுத்துவிட்டு வெளியேறப் போகிறார். அதற்குள் நீ இன்று மாலை நடைபெறும் நமது இந்தி எதிர்ப்புப்பொதுக் கூட்டத்தில், 'காங்கிரசைவிட்டு வெளியேறிய தோழர் என்.வி.நடராசன்' அவர்களும் கலந்துகொள்வார் என்று துண்டு அறிக்கை அச்சடித்து, எடுத்துக்கொண்டு கூட்டம் நடைபெறும் கட்டிடத்தின் வாயிலண்டையில் போய் நில். தோழர் நடராசன் விலகல் கடிதம் கொடுத்துவிட்டு வெளிவந்தால், இந்த துண்டு அறிககைகளை அவரிடமும், பிறரிடமும் கொடு. நிலைமை வேறு விதமாக இருந்தால் அப்படியே எடுத்துக்கொண்டு வந்து விடு* என்று சொல்லி அனுப்பினார்கள். அண்ணா அவர்கள் முன்கூட்டி நினைத்தவாறே 'நிகழ்ச்சி தடந்தேறி தோழர் நடராசன் விலகல் கடிதத்தைத் தோழர் சகதியமூர்த்தி அவர்களிடம் கொடுத்துவிட்டு வெளியே வந்தார். தோழர் கணேசன், நடராசன் அவர்களிடம் துண்டு அறிக்கையை நீட்டினார். தோழர் நடராசன் துண்டு அறிக்கையைப் பார்த்துத் திடுக்கிட்டுப் போனார். அறிஞர் அண்ணாவின் குறும்பு' என்று எண்ணிககொண்டு, வேறு வழியினறி அன்று மாலைப் பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டார். அறிஞர் அண்ணா அவர்களின் 'வரும்பொருள் உரைக்கும்' தன்மை வென்றது! அன்று தொடங்கிய தோழர் என். வி. நடராசன் அவர்களின் திராவிட இயக்கப் பணி தொடர்ந்து நடை பெற்றுக் கொண்டிருக்கிறது. மன்றம்,நாள் 1-12-56