அருமையும் எளிமையும் அறிஞர் அண்ணா அவர்கள் எந்த அளவுக்கு அருமையும் பெருமையும் உடையவர்களோ, அந்த அளவுக்கு எளிமையும் னிமையும் உடையவராவார்கள். மேடையேறிச் சொல் 4 லாற்றல், கட்டுரை - கதை - கவிதை நாடகம்- திரைக்கதை- வசனம் எழுதும் எழுத்தாற்றல் நாடகங்களில் சில உறுப்புகள் ஏற்று நடிக்கும் நடிப்பாற்றல், அரசியலிலிருந்து அடுக்களை வரையிலுள்ள பல்வேறு பிரச்சினைகளையும பிரச்சினைகளையும் தெளிவாக அறிந்து அவற்றின் நுட்பங்களையெல்லாம் வரையறுத்தும் தெளிவுபடுத்திக் காட்டும் ஆற்றல்,நாட்டிற்கும் மக்களுக்கும் உகந்த திட்டங்கள் தீட்டிக்காட்டிடும் ஆற்றல், இயக்கத் திற்குத் தவைமை தாங்கி அதனைத் திறம்பட நடத்திச் செல்லும் ஆற்றல், நண்பர்களோடு மணிக்கணக்கில் நாட் கணக்கில் உட்கார்ந்து தொடர்ந்து இனிமையாக உரை யாடும் ஆற்றல், உள்ளன்போடும் உயர்பண்போடும் பழகும் ஆற்றல், தலைவரோடு தலைவராகத் தொண்டரோடு தொண்டராய் நண்பரோடு நண்பராய் நடந்து கொள்ளும் ஆற்றலும் ஆகிய இத்துணை ஆற்றல்களையும் ஒருங்கே பெற்ற அறிஞர் அண்ணா அவர்களுக்குத் தமிழகத்தில், ஏன் இந்தியத் துணைக் கண்டத்திலேயே ஈடு இணையுள்ளார் எவரும் இல்லை என்றுதான் சொல்லவேண்டும், அறிஞர் அண்ணா அவர்கள் பெற்றுள்ள ஆற்றல்களில் ஒன்றையோ அல்லது ஒரு கிலவற்றையோ அரைகுறையாகப்
பக்கம்:அண்ணாவோடு வாழ்ந்த அந்தச் சிறைவாசம்.pdf/168
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
