பக்கம்:அண்ணாவோடு வாழ்ந்த அந்தச் சிறைவாசம்.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

165 பெற்றிருந்தால்கூட, அறந்தையின் உச்சியிலே ஏறி நின்று குதியாட்டம்போடும் பலரை நாம் அன்றாடம் கண்கூடாகக் கண்டு வருகிறோம். சாதாரண கூழைமட்டை. பேயத்திக் கொமபு, முருங்கை மிலாறு, தாழங்காய் போன்றவர்களெல் லாம் கூட அரைகுறைத் திறமையும்,தகுதியும் பெற்றுவிட்ட உடனே தலை துள்ளிக் குதிப்பதைப் பார்க்கிறோம். பல ரிடத்தில் ஆற்றல் வளர வளர அகந்தையும் வளரக் காண் கிறோம். ஆனால் அறிஞர் அண்ணா அவர்களிடத்தில் அறி வாற்றலும், பெருமையும், புகழும், சீரும் சிறப்பும், பொலிவும், வலிவும், ஆக்கமும், தகுதியும், திறமையும், செம் மையும் செவ்வாசகும் வளரவளர, எளிமையும் இனிமையும் மேன்மேலும் வளாநதோங்கும் அரிய பண்பை அவரோடு நெருங்கிப் பழகுகிறவர்கள் தெளிவாக உணருவார்கள். . சென்ற ஏழு ஆண்டுகாலத்தில் திராவிட முன்னேற்றக் கழ க ம பரந்து, விரிநது, வளர்ந்து, சிறந்து, ஓங்குபுகழ் எய்தி வநதிருக்கிறது என்றால், அதற்குப் பெரும்பங்கு முழு முதற் காரணமாக இருந்து வருபவர் அறிஞர் அண்ணா அவர்களே ஆவார்கள். அறிஞர் அண்ணா அவர்களின் அறிவு, ஆற்றல் நேரம், நினைப்பு: உழைப்பு, பேச்சு, எழுத்து, நடிப்பு நாடகம், திரைப்படம் ஆகியவற்றின் மூலம் கழகம் வளர்ந்து வந்துள்ள தன்மையைக் கூர்ந்து கவனிக்கும்போது, அவர் அளவுக்கோ, அல்லது அவர் அருகே அணுகுகிற அளவுக்கோ நம்மால் பணியாற்ற இயலுமா என்பதைத் தான் லெண்ணம் கொண்ட ஒவ்வொருவரும் தமக்குத்தாமே சிந்தித்துப்பார்த்து வியந்து போவார்கள். இவ்வளவு அருமை பெருமைகளைப் படைத்த அண்ணா அவர்கள் மிதச் சாதாரணமானவரோடும் பழகுகிறார், மிகச் சாதார மாணவர்களிடத்தில் காணப்படும் சிறிதளவு திறமையாக இருந்தபோதிலும் அதனைப் பெரிதும் பாராட்டுகிறார், நல்