பக்கம்:அண்ணாவோடு வாழ்ந்த அந்தச் சிறைவாசம்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 ஒருவர் இந்த நிலைமையை அண்ணாவிடம் தெரிவித்து, அண்ணாவின் உதவியை நாடினார். அண்ணா அவர்கள் என்னை அனுப்பிக் கழகத் தோழர்களை சிறை விதி களுக்குக் கட்டுப்பட்டு நடக்கும்படி அறிவுரை கூறிவிட்டு வரும்படி சொன்னார்கள். நான் போய் அண்ணாவின் கருத்தைக் கூறினேன். அவர்கள் கேட்கவில்லை. நிலை னயை அண்ணாவிடம் வந்து கூறிவேன். அண்ணா அவர்கள் உடளே தாம் வந்து எல்லாச் சிறுநீர்ட்பானைகளை யும் வெளியே அகற்றுவதாகவும், கழகத்தோழர்கள் அனை வரும் ஒதுங்கி உட்கார்ந்து கொள்ளட்டும் என்று சொல்லச் சொல்லி என்னை மீண்டும் அனுப்பினார். நான் அண்ணா அவர்கள் கூறியதை அப்படியே வெளியிட்டேன். கழகத் தோழர்கள் உடனே தங்கள் செயலுச்சாக வருந்திக் ஆற்றினர். பின்னர் அண்ணாவிடம் வந்து கண்ணீர் சிந்தியவண்ணம் மன்னிப்புக்கேட்டுக்கொண்டனர். கடமையை சிறைக்காவலர்களும் சிறையதி காரிகளும். அறிஞர் அண்ணா அவர்களின் மீது தனி அன்பும், தனிமதிப்பும் வைத் திருந்தனர். கைதி ரெய்யவேண்டிய கடமைகளை ஒழுங்குறச் செய்வதில் அண்ணா அவர்கள் ஒருபோதும் தயங்கிய தில்லை. அறிஞர் அண்ணா அவர்களோடு நாங்கள் வாழ்ந்த சிதை வாழ்வு எங்களுக்கெல்லாம சிறந்த பண்பினையும் பயளையும் வளர்க்நம் பணிகளுக்கு ஊக்கம் தருவதாக அமைத்திருந்தது. எல்லளவோ நிகழ்ச்சிகளை சிறை வாழ்வைப் பொறுத்து அடுக்கடுக்காய்ச் சொல்லலாம் என்றாலும் ஏம் இடந்தராது என்று அஞ்சி அவற்றைச் சொல்லாம விடுகிறேன். அனபுக்கும், அறிவுக்கும், ஆற்ற லுக்கு பண்புக்குஎடுத்துக்காட்டாகவிலங்கிய பேரறிஞர் அண்ணா அவர்களின் பெரும்புகழ் என்றென்றும் வாழ்க! அவரது புகழோளி நடச்செல்லாம் வழி காட்டுவதாக!

முரசொலி, அறிஞர் அண்ணா மலர், 1972.