பக்கம்:அண்ணாவோடு வாழ்ந்த அந்தச் சிறைவாசம்.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

169 மிகச் சாதாரண உடைகளை உடுத்திக் கொள்கிறார், மிகச் சாதாரண வசதிகள் கிடைத்தாலும் திருப்தி கொள்கிறார். மிகச் சாதாரண உணவு உட்கொள்உதிலே அமைதி பெறு கிறார். அடக்கமே உருவாக அமையப் பெற்றிருக்கிறார் என்று அறியும்போது அழுக்காறற்ற உள்ளம படைத்த வர்கள் அனைவரும் அறிஞர் அண்ணா அவர்களைப் போற்றிப் பாராட்டி வியப்புற்று நிற்கிறார்கள். அருமைக் கெல்லாம் அருமையாயும், எளியமக்கெல் லாம் எளிமையாயும விளங்கும் அறிஞர் அண்ணா அவர் களைச் சீரிய வழி காட்டியாகக் கொள்வதிலும் அவரது அரிய அறிவுரைகளைக் கேட்பதிலும், அவரது உயரிய திட்டங் களை நடைமுறைக்குக் கொண்டு வருவதிலும் இலட்சக் கணக்கானவர் நாடெங்கிலும் துடியாகத் துடித்துக் கொண் டிருக்கிறார்கள். எனவே தான், அப்படிப்பட்ட அறிஞர் அண்ணாவைப் பெற்றிருப்பதிலே திராவிட முன்னேற்றக் கழகம் என்றென்றும் பூரிப்பும் பெருமையும் கொள்கிறது! மன்றம், நாள்: 15-12-56 . சென்றிடுவீர் வென்றிடுவீர் தமிழ் உமது முரசாகட்டும்! பண்பாடு உமது அவசமாகட்டும்! அறிவு உமது படைக்கலனா கட்டும்! அறநெறி உமது வழித் துணையாகட்டும்! உறுதியுடன் செல்வீர்! ஊக்கமுடன் பணிபுரிவீர்! ஏற்றமிகு வெற்றியினை ஈட்டுவீர்! பாட்டு மொழி யுடைய நமது தாயகம் வாழ - தரணிக்குத் துணை நின்றிடும் தருதிபெறச் சென்றிடுவீர்! வென்றிடுவீர்! -11- அறிஞர் அண்னா