பக்கம்:அண்ணாவோடு வாழ்ந்த அந்தச் சிறைவாசம்.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அண்ணாவும் இசைப்பெரும் புலவரும் - - நாதசுர இசையுலகில் மன்னர் மன்னராய் விளங்கிய வரும், மங்காமணி விளக்காய் நின்று என்றென்றும் புகழொளி வீசி வந்தவரும், ஈடும் எடுப்பும் அற்றுத் திகழ்ந்தவரும், தன்மானம் குன்றாமல் தலைதாழாச் சிங்கமென வாழ்ந்த வீண் வரும், ஆடம்பரக்காரருக்கும் - பணக்காரருக்கும் - பதவியாளருக்கும் பணியாமல், வளையாமல், நெளியாமல் வாழ்ந்து வந்தவரும் (நாதசுர இசையுலகில் இருந்துவந்த கைகட்டல், வாய்பொத்தல், மேல் துண்டை இடுப்பில் கட்டல், செருப்பைக் கழற்றிவிட்டுக் குனிந்து நின்று வணங்கல் சட்டை போடாமலிருத்தல், குடுமிவைத்தல்' போன்ற அடிமைச் சம்பிரதாயங்களை அடியோடு ஒழித்த புரட்சி வீரரும் ஆன மறைந்த இசைப் பெரும் புலவர் டி.என். இராசரத்தினம் அவர்கள், அறிஞர் அண்ணா அவர்களிடம் பெருமதிப்பும், பெருமரியாதையும் காட்டி அன்போடு பழகி வந்தவராவார். அறிஞர் அண்ணா அவர்களின் திருவாவடுதுறை இராச ரத்தினம் அவர்களின் நாதசுர இசையில் திளைத்து அவரைப் பலபடப் பாராட்டிப் போற்றி மகிழ்ந்து அவரோடு இனிய முறையில் பழகிவந்தார்கள். நாதசுரமன்னர் டி. என் இராசரத்தினம் அவர்களில் தாயவக் கச்சேரி அண்மையில் எங்கேயேனும் உண்டுஎன்றால், அங்குப்போகும் வாய்ப்பு இருக்கிறது என்றால், அண்ணா