. + 171 அவர்கள் அங்கு ஓடோடிப் போய் இருந்து நாதசுர யைக் கேட்டு மகிழ்வார்கள். அவையில் தம் எதிரே அண்ணா அவர்கள் உட்கார்ந்திருக்கிறார்கள் என்பதைக் கண்டறிந்து விட்டால், தோழர் இராசரத்தினம் அவர்கள் பெருமகிழ்ச்சி யுற்றும், பெருமுயற்சி எடுத்து மிகத் திறம்பட நாயனம் வாசித்துக் காட்டுவார்கள். திருச்சியில் தோழர் டி.பி. பொன்னுச்சாமி அவர்கள் வீட்டுத் திருமணம் ஒன்றிற்குத் தோழர் இராசரத்தினம் அவர்களின் நாதசுர இசையரங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இசையரங்கு முடியும் தறுவாயில் அறிஞர் அண்ணா அவர்கள் அங்கு வந்தார்கள். அண்ணா அவர்கள் வந்துவிட்டார்கள் என்பதை அறிந்தவுடனே, தோழர் இராசரத்தினம் அவர்கள் தம் களைப்பையும் பாராமல், வாசிப்பை நிறுத்த வந்த நிலையை மாற்றி மேற்கொண்டு ஒன்றரை மணி நேரம் மிக நேர்த்தியாகத் திறம்பட வாசித்துக் காட்டினார்கள். அறிஞர் அண்ணா அவர்கள், தோழர் எஸ். எஸ்.பி. லிங்கம் அவர்கள் மக்களில் படிப்புத் துவக்க விழாவின்போது இசைப்பெரும்புலவர் டி. என். இராசரத்தினம் அவர்களைப் பாராட்டிப் பேசும்போது, நாதசுர இசை தமிழ்நாட்டின் தனிப்பெருமைக்குரிய ஈடும் எடுப்புமற்ற அழியாச் செல்வம் என்றும், அச்செல்வம் இசைப்பெரும்புலவர் இராசரத்தினம் அவர்களில் திறமையாலும் உழைப்பாலும் புதுமையும், பொலிவும், புகழும், பெருமையும் பெற்று விளங்குகிறது என்றும், அவரது நாதகரஇசையில் குழலோசை, யாழோசை, பிடிலோசை, வாய்ப்பாட்டோசை ஆகிய அனைத்தையும் தனித்தனியாகவும் சேர்த்தும் காணலாம் என்றும், அவர் காட்டும் புதுவழியைப் பின்பற்ற மந்த நூதசுர வல்லுதர் களுக்கு பல தினங்கள் பிடிக்கும் என்றும் குறிப்பிட்டார்கள். சென்னை கடற்கரையில் பல இலட்சக்கணக்கான மக்களைக் கூட்டி வளந்து, அவளிடம் பயிற்சி பேற்றவர்களையவ்ஜாம்
பக்கம்:அண்ணாவோடு வாழ்ந்த அந்தச் சிறைவாசம்.pdf/172
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
