பக்கம்:அண்ணாவோடு வாழ்ந்த அந்தச் சிறைவாசம்.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 நாதசுர இசையை முழங்கச் செய்து அவருக்குப் பொன் னாடை போர்த்தி, அவரிடம் பொன்முடிப்பு அளிக்கத் தாம் ஆவல் கொண்டிருப்பதாகவும், அவரது அடுத்த பிறந்தநாள் விழாவின்போது அதனைச் செய்ய எண்ணியிருப்பதாகவும் றினார்கள். ண்ணா அவர்களின் ஆவல் நிறைவேறு வதற்குள்ளாகவே, நாதசுரமணி மறைந்துவிட்டதானது, அவர்களுக்குத் திகைப்பையும், துக்கத்தையும், துயரத்தையும் தருவதாகிவிட்டது. அறிஞர் அண்ணா அவர்களுக்கு நாதசுர இசை என்றால் மிகச் சின்னஞ் சிறு பருவத்திலிருந்தே அதனிடத்து மிக்க ஆர்வம் உண்டு. நடு இரவில், நிலவொளி காலத்தில் தோழர் இராசரத்தினம் அவர்களின் நாதசுர இசை தெருக்கோடியில் எழும்ப அதனைத் தொலையில் நின்று கேட்பதிலே அண்ணா அவர்களுக்குத் தனி விருப்பம். தமக்கு எதிர்காலத்தில் வாழ்வளிக்கப் போகிறவர் அறிஞர் அண்ணா அவர்களே ஆவார்கள் என்று நாதசுர மன்னர் மன்னர் கருதிக் கொண்டிருந்தார். அந்த அளவுக்கு இருவரிடையே உள்ளன்பு வளர்ந்திருந்தது. மன்றம், நாள்: 1.1.57 மக்கள் சக்தி மகத்துவம் எங்களால் எப்படி ஜனநாயகத்தைக் காப் பாற்ற முடியும் என்று கேட்கலாம். மக்களிடம் உள்ள சக்தி, சாதாரண சக்தி அல்ல. ஆக்கவும், அழிக்கவும் வல்லமை படைத்த சக்தி. அந்தக் சக்தியைப் பயன் படுத்தும் விதமாகப் பயன் படுத்தினால்தான் அரசு நிலைக்கும். அறிஞர் அண்ணா