பக்கம்:அண்ணாவோடு வாழ்ந்த அந்தச் சிறைவாசம்.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அண்ணாதுரை பாதை! காஞ்சிபுரம் தொகுதியைச் சேர்ந்த பல கிராமங்களுக் கும் அண்ணா அவர்கள் வாக்காளர்களைச் சந்திப்பதற்காகச் சென்று கொண்டிருந்தார்கள். அப்படியே ஒரு கிராமத்திற்கு அறிஞர் அண்ணாவும் வேறு சில நண்பர்களும சென்றார்கள். அந்த ஊர் மக்களும் அண்ணா அவர்களை மற்ற பகுதி மக்கள் வரவேற்பதைப்போலவே மிகுந்த உற்சாகத்தோடும் மகிழ்ச்சியோடும் வரவேற்றார்கள். அண்ணா அங்குக் கூடி யிருந்தவர்களைப் பார்த்து 'உங்கள் ஊர்ப் பாதை புதிதாக இருக்கிறதே எப்பொழுது போடப்பட்டது" என்று கேட் டார்கள். மிகச் சமீப காலத்தில் தான் போடப்பட்டது என்று தெரிவித்தார்கள். அந்தக் கூட்டத்தில் இருந்த ஒருவர் இந்தப் பாதைக்கு நாங்கள் 'அண்ணாதுரை பாதை" என்று பெயர் வைத்திருக்கிறோம் என்றார். ஏன்? என்று புன்முறுவலோடு கேட்டார்கள். அதற்கு அவர் கூறினார். நீங்கள் இந்தத் தொகுதியில் தேர்தலுக்கு நிற்கிற காரணத் தால்தான் இவ்வளவு அவசரமாக காங்கிரஸ் சர்க்கார் இந்த ஊர்ப்பாதையைப் போட்டிருக்கிறார்கள். ஆக இது உங்க ளால் எங்களுக்கு கிடைத்ததுதானே, எனவே, 'அண்ணாதுரை பாதை" என்ற பெயர் இதற்கு பொருத்தம்தானே" என்றார். சூழ்ந்து நின்றவர்கள் அனைவரும் அதனைச் சிரிப் புடன் ஆமோதித்தனர். மன்றம் நாள்: 15.3,57