சிற்றூர்களில் எலெக்ஷன்" திராவிட முன்னேற்றக்கழகம் தேர்தலில் முதல் தடவை யாக ஈடுபட்ட பொழுது, தேர்தலில் ஓட்டுக்கேட்பது மட்டு மல்ல, தேர்தல் என்றால் என்ன? ஓட்டுமுறை எப்படி? அதன் பெருமை - பொறுப்பு என்ன? என்றெல்லாம் விளகிக வேண்டியிருந்தது. அறியாமை அதிகமாக நிலவுகிறபடி யால், கண்மூடித்தனமாக இதுவரை ஓட்டுக்கள் போடப் பட்டிருக்கின்றன. முதல் தடவையாகக் கழகம் தேர்தலுக்கு வந்தபொழுது, தாங்கள் யார? தங்களுடைய கொள்கை சள் என்ன? என்பதை விளக்குவதுமட்டும் போதாதாக இருந்தது. ஜனநாயகம், ஓட்டுமுறையின் அவசியம், அதன் அருமை இவற்றை விளக்கிச்சொல்லி விட்டு, பிறகு கழகத்தின் கொள்கைகளைச் சொல்லி ஓட்டுப் பெற வேண்டியிருக்கிறது இதற்கு முன்னதாக வந்த தேர்தலில் ஈடுபட்டிருந்த பெரும் அரசியலில் கட்சிகள் அந்தவகை ஜன நாயக உணர்வை ஊட்டவில்லை; ஆளுங்கட்சி மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்குப் பணபலத்தை நம்பியதால், மக்களி வாக்குரிமையின் மேன்மையைப் பற்றிப் பேச வில்லை; மக்களாட்சி முறையின் அடிப்படையில் ளிடையே வாக்குரிமைகளைப் பெறவில்லை. தேர் தல்கள் பல வந்திருந்து போதிலும், இன்னும் 'தேர்தல் ஓட்டு இவைகளைப் பற்றித் தெளிவான விளக்கம் மக்களுக்கு L யே ண்டாகவில்லை.
பக்கம்:அண்ணாவோடு வாழ்ந்த அந்தச் சிறைவாசம்.pdf/175
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
