175 அறிஞர் அண்ணா அவர்கள் அவர் தொகுதியில் தேர்தல் சுற்றுப்பயணத்தின் போது.ஒரு சிற்றூர்க்குப் போயிருந்தார். அங்கு ஒரு குடிசைக்குப் பக்கத்தில் அண்ணா அவர்கள் உட்கார்ந்திருந்தார். அப்பொழுது ஒரு கிழவி அந்தப் பக்கம் வந்தார்கள். "நீங்கள் யார்?" என்று கிழவி கேட்டாள். "எலெக்ஷக்ஷனுக்கு வந்திருக்கிறோம் என்று அண்ணா சொன்னார். கிழவி சற்று யோசித்தாள்; பிறகு புரிந்துகொண்டவள் போல, "எலெக்டிரிக் லைட் போட வந்திருக்கிறீர்களா? என்றாள். 'இல்லையம்மா எலெக்ஷன் ஓட்டுப் போடுவது, ஓட்டுக் கேட்க வந்திருக்கிறோம்". "அதுதான் ஐந்து வருஷத்து முன்னே வந்து வாங்கிட்டுப் போயிட்டான்னே!" "மறுபடியும் இட்பொழுது ஒட்டுக் கிடைக்கும். அதை உங்களுக்கு யார் பேரில் நம்பிக்கையிருக்கிறதோ, அவர்களுக் குப் போடலாம். "நீ நிக்கிறியா?" "ஆமாம்”] சரி ஓட்டைக்கொடு! உனக்கே தந்துடறேன்." தேர்தல் நாளன்று, தேர்தல் சாவடியில்தான் ஓட்டுச் சீட்டைத் தருவார்கள் என்றெல்லாம் அண்ணா அவர்கள் விளக்கிச் சொல்ல வேண்டியிருந்தது. தேர்தலில் ஓட்டுக் கேட்பதற்கு முன்னால், தேர்தல் ஓட்டு என்பவைகளைப்பற்றி மக்களுக்கு விளக்கிவிட்டு, பின்பு தான் நாம் தோதுவில் நிற்கும் கொள்கைளைப் பற்றிச் சொல்ல வேண்டியிருந்தது. மன்றம், நாள்: 1.4.57 .
பக்கம்:அண்ணாவோடு வாழ்ந்த அந்தச் சிறைவாசம்.pdf/176
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
