பக்கம்:அண்ணாவோடு வாழ்ந்த அந்தச் சிறைவாசம்.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேரறிஞர் அண்ணா பேரறிஞர் அண்ணா அவர்கள் அழுதுகொண்டே குழந்தையாகப் பிறந்தபோது, அவர் வீட்டிலுள்ளவர்க ளெல்லாரும் சிரித்துக் கொண்டே வாரியணைத்து வர வேற்றனர்; அவர் சிரித்துக் கொண்டே மறையும்போது, நாட்டிலுள்ளவர்களெல்லாம் தேம்பித் தேம்பி கழுது கொண்டே வாரிக் கொடுத்து விடை பெற்றனர். பொதுவாக இந்தியாவின், குறிப்பாகத் தமிழகத்திவ் கோடானுகோடி மக்களின் உள்ளங்களைத் தம் அறிவுத் திறனாலும்,ஆற்றல் வலிமையினாலும், பண்பாட்டுச் செறி வினாலும், செயல் நுட்பததினாலும கொள்ளை கொண்டு எல்லாருடைய இதயங்களிலும் நீங்காத, நிறைந்த ஓர் இடத்தைப் பெற்றனர் அறிஞர் அண்ணா அவர்கள். வசதி, வாய்ப்பு, அதிகாரம், ஆதிக்கம்,பட்டம்,பதவி, தோட்டம், துரவு, காடு, மேடு மாட மாளிகை, கூட கோபுரம், கோட்டை கொத்தளம், பணம் பகட்டு போன்ற வற்றை எவரும் எங்கும் எளிதிலோ, அன்றிச் சிறு பெரு முயற்சியிலோ பெற்றுவிட முடிகிறது. . அவற்றை நேர்வழியிலும் பெறுகிறார்கள்; குறுக்கு வழி யிலும் பெறுகிறார்கள்; கோணல் வழியிலும் பெறுகிறார்கள். ஆனால், ஒருவர் அவ்வளவு எளிதில் பெற முடியாத விலை மதிக்க முடியாத பொருள் பிறருடைய இதயமேயாகும்.