177 தி படைத்த பெரும் பணக்காரர் ஒருவர் எட்டு அடுக்கு மாளிகையில், உயரத்திலே உள்ள நிலா முற்றத்தில், பஞ்சணை பொருத்திய மலர்ப்படுக்கையில், பக்கத்தில் இருவர் வெண்சாமரம் வீச,மூவர் கால் பிடிக்க, நால்வர் கை பிடிக்கப் படுத்திருந்தாலும் அவரைச் சுற்றிலும் நின்று பணி யாற்றுபவர்கள் பெரும்பாலும் என்ன எண்ணிக் கொண்டு பணியாற்றுவார்கள்? இவன் எப்போது ஒழிவாளோ, நாம் எப்போது மன அமைதி பெறுவோமோ! என்று எண்ணிக்கொண்டுதான் அடிமை வேலை செய்வார்கள். எவ்வளவு மிக்க வசதியுடை யவராக இருந்தாலும், பக்கத்திலிருந்து ஓயாது ஒழியாது பணியாற்றுபவர்கள் இதயத்திலே கூடக் கடுகளவும் இடம் வாழ்க்கையைக் கடத்திக் கொண்டு போகிறவர்கள் எத்தனையோ பேர்கள் இருக்கிறார்கள். பெற முடியாமல் தம் கீழே வேலை செய்பவர்களின் இதயத்தில் இடம் பெற முடியாத அதிகாரிகள், பக்கத்து வீட்டார் இதயத்தில் இடம் பெற முடியாத குடும்பத்தினர். தந்தை இதயத்தில் இடம்பெற முடியாத தனயன், தனயன் இதயத்தில் இடம் கிடைக்காத தந்தை என்றவாறு, பிறர் இதயத்தில் இடம் பெறாமலும், பெற முடியாமலும் தவிப்பவர்கள் உலகில் கோடானுகோடி மக்கள் இருக்கிறார்கள். விலை உடைமையை, ஆளை, வேலையை, அதிகாரத்தை, பட்டத்தை, பதவியை, வாக்குச்சீட்டைக் கூட கொடுத்து வாங்கிவிட முடிகிறது பவரால்; ஆனால் பிற ருடைய இதயத்தை எவராலும் விலை கொடுத்து வாங்கிவிட முடிவதில்லை. ஓர் இலட்ச ரூபாயை நீட்டி, "உன் இதய அன்பை என்னிடம் என்றென்றும் வை" என்று ஒருவர் கேட்டாலும் தொகையைப் பெற்றுக் கொண்டவன், தொவை கொடுத்தவரை வாயார வாழ்த்தினாலும், 'ஓர்
பக்கம்:அண்ணாவோடு வாழ்ந்த அந்தச் சிறைவாசம்.pdf/178
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
