178 இலட்ச ரூபாய்தானே தந்துள்ளான்; கஞ்சப்பயல். இவன் கொள்ளையடித்து வைத்தள்ள கோடிக் கணக்கான ரூபாய் களிலே இன்னும் நான்கைந்து இலட்சம் தரக் கூடாதோ?' என்று இதயத்தால் எண்ணவே செய்வான். என்றாலும் எளிதில்பெற்றுவிட முடியாத இதயங்களை; பேரறிஞர் அண்ணா அவர்கள் எளிதாகவும் பெற்றார்கள். ஏராளமாகக் கோடிக் கணக்கிலும் பெற்றார்கள். அதனால் தான் அவர் 'செயற்கரிய செய்த பெரியார்' என்று எல்லோ ராலும் பாராட்டப் பெறுகிறார்கள். பேரறிஞர் அண்ணா அவர்களின் பெயரையும், புகழை யும், அருமையையும், பெருமையையும், பண்பையும், போக் கையும் அறியாதவர்களும் தெரியாதவர்களும் நாட்டில் எங்கணும் இல்லை. அவரை நினைத்து நினைத்து நெக்குரு காத உள்ளம் இல்லை; அவருடைய புகழையும், பெருமை யையும் பற்றிப் பேசாத நா இல்லை. நாட்டின் நல்லவர் களெல்லாம் தொழுதேத்தும ஒளியாக அவர் திகழ்கிறார். கோடானுகோடி மக்கள் இதயத்தில் இடம் பெற்ற பேரறிஞர் அண்ணா அவர்களின் அன்பு இதயத்தில் இடம் பெற்றிருந்த தம்பிமார்களில் தக்க ஓர் இடத்தை நான் பெற்றிருந்தேன் என்பதை எண்ணுந்தோறும், பூரிப்போடும், பெருமித உணர்வோடும் பேரின்பம் பெறுகிறேன். பேரறிஞர் அண்ணா அவர்கள் எல்லாரிடத்திலும் அன்பு காட்டுவார்; பற்றுவைத்திருப்பார்; மதிபபுச் செலுத்துவார்; ஆனால், ஒரு சிவரோடு மட்டுந்தான் பழகுவார். 'நவில் தாறும் நூல் நயம் நயம் போலும் பயில் தொறும் பண்புடை யாளர் தொடர்பு' என்ற வள்ளுவப் பெருந்தகையாரின் இலக்கணத்தில் காணும் பண்புடையாளர் தொடர்பினால் ஏற்படும் நயத்தை, பேரறிஞர் அண்ணா அவர்களோடு தெருங்கிப் பழகினவர்கள்தாம் நன்கு அறிவார்கள்.
பக்கம்:அண்ணாவோடு வாழ்ந்த அந்தச் சிறைவாசம்.pdf/179
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
