சிபார்சுக்குப் போக-சிபார்சு அறிஞர் அண்ணா அவர்கள் படித்து முடித்தவுடன் அவரை அரசாங்க வேலையில் எதிலேனும் அமர்த்த வேண்டும் என்பது அவர் வீட்டாரின் எண்ணம். அண்ணாவின் சிற்றன்னை தொத்தா அவர்கள் அண்ணா வைப் பார்த்து அடிக்கடி அவரை போய்ப் பார், இவரைப் போய்ட் பார் என்று சொல்லிக்கொண்டேயிருப்பார்களாம் அரசாங்க வேலையில் அமராது பொதுப் பணியிலேயே ஈடுபட்டிருக்க வேண்டும் என்பது அண்ணாவின் எண்ணம். அவ்வப்போது ஏதாவது சாக்குப்போக்குச் சொல்லித் தட்டிக் கழித்துக்கொண்டே வருவது அவரது வழக்கமா யிருந்து வந்தது. போய்ப் ஒரு தடவை காஞ்சிபுரத்திலுள்ள முக்கியமான ஒருவரிடம் ஒரு சிபார்சுக் கடிதம் பெற்று, சென்னை உயர் நீதி மன்றத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த அதிகாரி ஒருவரைப் பார்க்கும்படி அண்ணா அவர்கள் அனுப்பப்பட்டாராம். அந்த அதிகாரிக்குத் தம்மை அறிமுகப்படுத்திவைப்பதற்காக ஒருவரைக் கூட அழைத்து கொண்டு அண்ணா அவர்கள் அவரிடம் சென்றார்களாம். "இவர்தான் சி.என். அண்ணாத்துரை, உங்களைப் பார்க்க வந்திருக்கிறார்கள்" என்று அண்ணாவுடன் வந்தவர் அந்த அதிகாரியிடம் அண்ணாவை அறிமுகப்படுத்தி வைத் தாராம். அவர் உடனே உங்களைக் காணவேண்டும் என்று 66
பக்கம்:அண்ணாவோடு வாழ்ந்த அந்தச் சிறைவாசம்.pdf/18
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
