பக்கம்:அண்ணாவோடு வாழ்ந்த அந்தச் சிறைவாசம்.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

179 தம்மோடு நெருங்கிப் பழகும் தம்பிமார்களுக்கு ஊக்கம் தந்து, ஆக்கம் பயந்து, அவர்களையெல்லாம் உரிய துறை களில் ஆவாககிவிடும் பாங்கு அறிஞர் அண்ணா அவர்களிட தில் மிகச் சிறப்பாகவும், செம்மையாகவும் அமைந்திருந்தது. 1937-ஆம் ஆண்டில் நான் தஞ்சை மாவட்டம் பட்டுக் கோட்டைக் கழக உயர்நிலைப் பள்ளியில் படித்துக்கொண் டிருந்த போதுதான், அவருடைய சொல் வன்மையைப் பிறர் சொல்வக் கேட்டுப் பூரித்துப் போனேன். 1938-இல்தான் முதன் முதல் அவர் எழுத்தாற்றலை விடுதலை தலையங்கங்களின் மூலம் கண்டு வியப்படைந் தேன். 193 - இல் சென்னைக் கடற்கரையில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புக் கூட்டம் ஒன்றில் அறிஞர் அண்ணா அவர்கள் பேசியபோதுதான் அவரை முதன் முதலாகக் கண்ணாரச் கண்டேன்; அவரது இனிய பேச்சைக் காதாரக்கேட்டேன். சீசரின் மனைவி ஷேக்ஸ்பியர் சீசரின் மனைவியைப் பற்றிக் குறிப்பிடுகையில் சீசரின் மனைவி குற்றங்குறை களுக்கு அப்பாற்பட்டவளாக இருக்கவேண்டும் என்று கூறியுள்ளார். அதுபோல், பெரிய அரசை நடத்திச் செல்பவர்களும் எந்த விதமான குறை களுக்கும் அப்பாற்பட்டவர்களாக வேண்டும். அறிஞர் அண்ணா