பக்கம்:அண்ணாவோடு வாழ்ந்த அந்தச் சிறைவாசம்.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறந்த ஓர் தலைவனின் இலக்கணம் "ஒரு தலைவர் அறிவாளியாயிருக்கலாம். ஆனால் மற்றவர்களையும் அறிவாளியாக்குபவர் தான் மிகச் சிறந்த தலைவர்! ஒரு தலைவர் உறுதி படைத்தவராக இருக்கலாம். ஆனால் மற்றவர் களையும் தன்னைப் போலவே உறுதி படைத்த வராக ஆக்குபவர்தான் மிகச் சிறந்த தலைவர்! ஒரு தலைவர் தெளிவுள்ளவராக இருக்கலாம்; ஆனால் குழப்ப மிகுந்த வேளையில் தெளிவைக் காட்டுவதோடு பிறரையும் தெளிவுள்ளவராக்கு பவர்தான் தலை சிறந்த தலைவர்! சிவர் நல்ல பேச்சாளர் என்ற முறையில் புகழை நிலை நாட்டு வார்கள்; சிலர் நல்ல எழுத்தாளர் என்ற முறை யில் புகழை நிலைநாட்டுவர்; சிலர் பிரச்னை களை நல்லமுறையில் விளக்கி தெளிவுபடுத்துபவர் என்ற முறையில் புகழை நிலைநாட்டுவர். ஆனால் வெகு சிலருக்குத்தான் தேர்ந்தெடுத்த துறை ஒவ்வொன்றிலும் தனிச் சிறப்பை ஏற்படுத்தும் ஆற்றல் இருக்கும். அத்தகைய ஆற்றல் பெறு வதுதான் ஒரு சிறந்த தலைவனின் இலக்கண மாகும். 26-12-67 சென்னையில், ராஜாஜி விழாவில்... அறிஞர் அண்ணா