பக்கம்:அண்ணாவோடு வாழ்ந்த அந்தச் சிறைவாசம்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 நீண்ட நாட்களாக விரும்பியிருந்தேன். நல்ல வேளையாக நீங்களே வந்துவிட்டீர்கள். அண்ணாத்துரை! உங்களிடம் ஒன்று சொல்லவேண்டும் விரும்பினேன். நான் என்று டிஸ்டிரிக்ட் முன்சீப் ஆவதற்கு எல்லாவித தகுதியுடைய வனாக இருந்தும், பல வருடங்களாக என்னைத் தேர்ந் தெடுக்காமல், என்னைப் புறக்கணித்து, வேறு யார் யாரை யோ தேர்ந்தெடுக்கிறார்கள். நீங்கள் ஏ. இராமசாமி முதலியாருக்கு மிகவும் வேண்டியவர்களாமே! நீங்கள் எப்படியேனும் அவரிடம் சிபார்சு செய்து, என்னை டிஸ்டி ரிக்ட் முன்சீப் வேலைக்குத் தேர்ந்தெடுக்கும்படி செய்ய வேண்டும்" என்று கேட்டுக் கொண்டாராம். 2 அண்ணாவிற்கு என்ன செய்வதென்று தோன்றவில்லை யாம். கோட்டுப் பைக்குள் இருந்த சிபார்சுக் கடிதத்தை அப்படியே கையால் கசககிக்கொண்டு, "என்னால் முடிந்த வரையில் பார்க்கிறேன் தங்களைச் சும்மா பார்த்துவிட்டுப் போகலாம் என்று வந்தேன். போய் வருகிறேன்" என்று சொல்லிவிட்டு அண்ணா அவர்கள் வந்துவிட்டார்களாம். மன்றம், நாள்: 1. 1. 54. கண்ணகி வழக்கு இன்னும் பத்துப் பதினைந்து ஆண்டுகளில் வழக்கறிஞர்கள் தமிழில் வாதாடுவதை நாம் பார்க்கமுடியும். தமிழில் தானே வாதாடினாள் கண்ணகி. அவள் கூறிய வாதங்களை ஆங்கில மொழியால் அல்ல - வேறு எந்த மொழியாலும் அளிக்க முடியாது. அரசர்சள் ஆணைகளைத் தமிழில்தானே செய்தார்கள்; நாம் புதிதாக எதை யும் செய்யவேண்டியது இல்லை. இழந்ததைப் பெற்றால் போதும். அறிஞர் அண்ணா