நந்தவனமும் நாயும் 1935-ல் நடைபெற்ற நகரசபைத் தேர்தலில், பெத்து நாயக்சன் பேட்டையில், அறிஞர் அண்ணாவை எதிர்த்து நின்ற கரங்கிரஸ்சாரருக்கு ஆதரவாகப் பலப்பல சொற் பொழிவாளர்கள் வந்தார்களாம். அவர்களில் ஒருவர் திரு. வி. கல்யாணசுந்தர னார் ஆவாராம். . தேர்தல் கூட்டமொன்றில் திரு.வி.க. அவர்கள் சொற் பொழிவாற்றும்போது, "நந்தவனத்தில் நாயொன்று செத்துகிடந்தால், மக்கள் தாயை அகற்றுவாரோ அல்லது நந்தவனத்தை அழிப்பாரோ! நந்தவனத்தை அழிக்கர்! ஒருக்காலும் அழிக்கார்! நாயையே அகற்றுவர்! அதுபோல காங்கிரஸில் தீயவர் சிலர் இருந்தால், தீயவரை அகற்றுவது நன்றா? அல்லது அதற்காகக் காங்கிரஸையே அழிப்பது நன்றா? கூர்ந்து பார்மின்! தீயவரை அகற்றுவதன்றோ நல்லாரின் கடமை! நந்தவனத்தைத் தூய்மைப் படுத்திக் காப்பாற்றுவது போல், காங்கிரஸையும் காக்க வேண்டும் என்பேன்" என்று கூறினாராம். அடுத்து நடைபெற்ற கூட்டத்தில் அறிஞர் அண்ணா அவர்கள் பேசும்போது, 'திரு வி.கல்யாண சுந்தரனார் பேசும் போது நந்தவனத்தில் நாய் செத்துக் கிடந்தால் நாயை அகற்றுவதா? அல்லது நந்தவனத்தை அழிப்பதா என்று கேட்கிறார். நல்லவர்கள் சுகம்பெறவும், நலிவடைந் தோர் குணம் பெறவுமே நந்தவனம் அமைந்திருக்கிறது.
பக்கம்:அண்ணாவோடு வாழ்ந்த அந்தச் சிறைவாசம்.pdf/20
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
