20 நல்ல மனிதர்கள் நுழையவேண்டிய நந்தவனத்தில் நாய் நுழையலாமா? நாய் நுழைந்தால் பின் அது நந்தவன மாகுமா? நலிந்தவர்க்கும் நலம் பயக்கவேண்டியநந்தவனம், நாயைச் சாகடிக்குமா? நாயும் சாகிறதென்றால், நந்த வனத்தில் மணம் வீசவில்லை விஷக்காற்று வீசுகிறது என்று தானே பொருள்படும். நாயையும் சாகடிக்கும் விஷக்காற்று வீசும் நந்தவனம் ஊரின் நடுவே இருக்கலாமா? அதனை அழித்துப் புதிதாக ஒன்றைத் தோற்றுவிப்பது தானே நல்லவர் செய்யும் கடமையாக இருக்க முடியும் என்று பதிலிறுப்பாராம். காங்கிரஸ்காரர்கள் வழக்கம்போல் அதற்குச் சமா தானம் கூற முன்வர முடியாமல், வேறு முறைகளில் திருப்பு வார்களாம். மன்றம், நாள் : 1. 2. 54. பாடுபட்டோர் பணம் முது கெலும்பு முழுவயிறு காணாதோர், முறியப்பாடுபடுவோர், வாழ்வின் சுவை காணார், வலியோரின் பகடைக் காய்கள், ஓடப்பர்-ஆகிய இவரெல்லாம் தருகின்ற வரிப்பணமே, கோட்டை யாய், கொடிமரமாய், பாதையாய், பகட்டுகளாய், அமுல் நடத்தும் அதிகாரிகளாய், அறிவு பெற அமையும் கூடங்களாய்த் திகழ்கின்றன. அறிஞர் அண்ணா
பக்கம்:அண்ணாவோடு வாழ்ந்த அந்தச் சிறைவாசம்.pdf/21
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
