பக்கம்:அண்ணாவோடு வாழ்ந்த அந்தச் சிறைவாசம்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அண்ணாவும் பத்திரிகைத் தொடர்பும் . கல்லூரியில் படிக்கும் போதே அறிஞர் அண்ணா அவர் களுக்குப் பத்திரிகைகளில் கதைகள் எழுத வேண்டும் என்பதில் ஊக்கமும், ஆவலும் மிகுதியும் உண்டு, அவர் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கையில், ஆனந்த விகடன், ஆனந்தபோதினி" ஆகிய பத்திரிகைகளில் சில கதைகள் எழுதி வெளிப்படுத்தியிருக்கிறார். 9 46 1935-ல் அறிஞர் அண்ணா காலஞ்சென்ற தோழர் பாசு தேவ் அவர்களோடு சேர்ந்து, அவருக்குத் துணையாக நின்று, தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார். அப்பொழுது 'பாலபாரதி" என்ற வாரப் பத்திரிகைக்கு அண்ணா அவர்கள் ஆசிரியராக இருந்து, தொழிலாளர் தலப பேணிக் கட்டுரைகள் எழுதி வந்தார். அந்தப் பத்திரிகை சில திங்கள்கள் நடைபெற்றுப் பிறகு நின்று விட்டது. பிறகு 1936-ல் அப்பொழுது செங்குந்தமித்திரன் அச்சகத்தின் நிர்வாகியாக இருந்த காஞ்சி மணி மொழியார் அவர்களோடு கூட்டாகச் சேர்ந்து தவயுகம் என்ற சிறந்த அறிவு விளக்க வாரப் பத்திரிகைக்கு ஆசிரியராக இருந்து நடத்தி வந்தார். பொருளாதார நெருக்கடியின் காரணமாகச் சிவ திங்கன்களுக்குப் பிறகு அது வெளிவர வில்லை.