பக்கம்:அண்ணாவோடு வாழ்ந்த அந்தச் சிறைவாசம்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23 நாளிதழாக வெளிவரவேண்டும் என்ற உறுதிப்பாட்டோடு அதற்கான நடவடிக்கைகளில் முயற்சி செலுத்தி வருகிறார். ஓர் ஆங்கில வார இதழைத் துவக்குவதற்கான முயற்சியில் இப்பொழுது ஈடுபட்டுள்ளார். நாளில் அறிஞர் அண்ணாவின் எழுத்து, பத்திரிகை யுலகிலே நல்லதொரு புரட்சியை உண்டாக்கி மாணவர் உலகை அடியோடு மாற்றிவிட்டது இற்றை விட்டது; என்றால் மிகையாகாது. மன்றம், நாள் : 1-3-54 புளியம் பழக் கதை போய்விட்டது தமிழ் இலக்கியங்களிலே, வௌவால் மனப் பான்மை என்று ஒன்றைக் குறிப்பிடுகிறார். மாமரத்திலே தலைகீழாகத் தொங்கிக் கொண் டிருக்கும் வெளவால், புளியம் புளியம் பழத்தைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்குமாம், அதுபோல அது வரை நாம் மாமரத்தில் தொங்கிக் கொண்டு புளியம் பழத்தை நிலைத்துக் கொண்டிருந்தோம இப்பொழுதுதான் 'நாம் தொங்கிக கொண் டிருப்பது மாமரம்' என்பதை உணர்ந்து மாம் பழத்தை நினைக்க ஆரம்பித்திருக்கிறோம்! வௌவால் மனப்பான்மையிலிருந்து விலகி, கிளி மனப்பான்மைக்கு வந்திருக்கிறோம்; 'எதையும் கொத்திப் பார்த்து சுவையை அறிவோம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறோம்' முழுச்சுவையையும் உணரும் மனப்பான்மை நம்மிடம வளர்ந்து வருகிறது! . அறிஞர் அண்ணா