பக்கம்:அண்ணாவோடு வாழ்ந்த அந்தச் சிறைவாசம்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராயுடன் சில நாட்கள் அரசியல் பேரறிஞர் எம். என். ராய் அவர்களுடன் நெருங்கிப் பழகும் பேற்றையும், அவருடன் சில நாட்கள் உடன் உறையும் வாய்ப்பினையும் அறிஞர் அண்ணா அவர்கள் பெற்றிருந்திருக்கிறார்கள். அறிஞர்ராயின் அழைப்பின் பேரில், பெரியார் ராமசாமி யோடு அறிஞர் அண்ணா அவர்கள், வடநாட்டுச் சுற்றுப் பிரயாணத்தில் ஈடுபட்டுச் சில முக்கியமான நகரங்களில் சொற்பொழிவாற்றினார்கள். அப்பொழுது டேராடூனில் அறிஞர் ராயின் விருந்தினராக இருக்கும் வாய்ப்பு அறிஞர் அண்ணாவுக்கு ஏற்பட்டது. எம்.என்.ராயும் அவரது துணைவியார் எலென் ராயும் மகிழ்ச்சியோடு வரவேற்று, அறிஞர் அண்ணாவோடும் பெரியாரோடும் பேசி மகிழ்ந் தார்களாம். அண்ணாவுக்கு அடிக்கடி டீ சாப்பிடுவதில் மிக்க விருப்பம் என்பதைத் தெரிந்துகொண்டார் எலென் எம்.என்.ராய் சொல்லுவதைக் குறிப்பதும், மடல்களுக்கு விடையிறுப்பதும், டைப் அடிப்பதும் ஆன செயல்களை ராய்க்கு உ.தவியாக எலென்ராய் அவர்கள் செய்வார் களாம். சமையல் செய்யும்போது இருவரும் சேர்ந்தே செயவார்களாம். ராய் அவர்களின் எளிய வாழ்வும், சலிப்படையாமல் பேசும் பண்பும், ஆழ்ந்த அறிவும், அன்பு சொல்லும் அண்ணாவின் உள்ளத்தைப் பெரிதும் கொள்ளை காண்டு விட்டனவாம். க் .