வெற்றிலைப்பாக்கும் மாணவப் பருவமும் அறிஞர் அண்ணா அவர்கள், சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில், இடைநிலை வகுப்பில் பயின்று கொண்டு இருக்கும்போது, இப்பொழுது பச்சையப்பன் கல்லூரித் தலைவராச இருக்கும் பேராசிரியர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி அய்யர் அவர்கள் ஆங்கிலப் பேராசிரியராக இருந்தார். அண்ணா அவர்களின் வகுப்பிற்கு ஷேக்ஸ்பியர் பாடத்தைக் கிருஷ்ணமூர்த்தி அய்யர்தான் கற்பித்து வந்தாராம். இடைநிலை வகுப்பில் படித்துக்கொண்டிருக் கும்போதோ, வெற்றிலைப்பாக்கு ஓயாமல் போடுவது அண்ணாவின் பழக்கம். ஒருநாள் கிருஷ்ணமூர்த்தி அய்யர் வகுப்பு எடுத்துக்கொண்டிருக்கும்போது, அண்ணா அவர் கள் வெற்றிலைப்பாக்குப் போட்டு மென்றுகொண்டிருந் தாராம். அண்ணா அவர்கள் ஏதோ மென்றுகொண்டிருப் பதைப் பார்த்துவிட்ட பேராசிரியர், வாயில் என்ன மென்று கொண்டிருக்கிறாய்?" கேட்டாராம். . என்று ஆங்கிலத்தில் அதற்கு அண்ணா அவர்கள் "வெற்றிலைப்பாக்கு"! என்று தமிழில் பதில் கூறினாராம். "வெளியில் போய் என்றாராம் ஆசிரியர். அதைத் துப்பிவிட்டு வா துப்பமாட்டேன்" என்றாராம் அண்ணா. "ஏன் துப்பமாட்டாங்?"
பக்கம்:அண்ணாவோடு வாழ்ந்த அந்தச் சிறைவாசம்.pdf/27
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
