அண்ணாவும் தொழிற்சங்கமும் அறிஞர் அண்ணா அவர்கள் கல்லூரிப் படிப்பு முடிந்த வுடன் தொழிற் சங்க நடவடிக்கைகளில்தான் முதலில் ஈடுபட்டார். தொழிலாளர்களின் நிலை உயரவேண்டும், அவர்களிடையே ஒற்றுமை நிலவவேண்டும், தொழிற்சங்கம் வலுப்பெறவேண்டும் என்பதிலே தணியா ஆர்வங்கொண்டு 1934, 1935, 1936 ஆண்டுகளில் பாடுபட்டார். அறிஞர் அண்ணாவைத் தொழிற்சங்க நடவடிக்கை களில் ஈடுபடுத்த முக்கிய காரணமாக இருந்தவர் காலஞ் சென்ற தோழர் பாசுதேவ் ஆவார்கள். அண்ணா அவர் களின் வீட்டார், அண்ணாவை ஏதேனும் ஒரு அரசாங்க வேலையில் அமர்த்தவேண்டும் என்பதிலே ஆர்வங்காட்டா அண்ணாவோ சரசியல் நடவடிக்கைகளிலேயே ஆர்வங் காட்டிவந்தார். தோழர்கள் பாசுதேவ். ஆல்பர்ட் ஜேசுதாசன் ஆகியவர்களோடு சேர்ந்து தொழிற்சங்க பணி புரிந்து வந்தார். தொழிற்சங்க நடவடிக்கைகள் மூலமாக. அந்த நாட்களில், காங்கிரசிலே இருந்த தோழர் என்.வி. நடராசனுக்கும் அண்ணாவுக்கும் தொடர்பு உண்டு; ஆனால் அரசியலில் இருவரும் எதிர் எதிர் கட்சியினர். தோழர் ஜம்னாதாஸ் மேத்தா தலைமையில், லக்ஷ்மண பூரியில் நடைபெற்ற அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் மாநாட்டிற்கு அண்ணர அவர்கள் தோழர் ஆல்பர்ட்
பக்கம்:அண்ணாவோடு வாழ்ந்த அந்தச் சிறைவாசம்.pdf/29
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
